உயர்வு தரும் உலகப் பொன்மொழிகள்
₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அப்துற்-றஹீம்
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :பொன்மொழிகள்
பக்கங்கள் :128
பதிப்பு :3
Published on :2019
ISBN :9789387853508
Out of StockAdd to Alert List
133 தலைப்புகளில் உலகளாவிய அறிஞர்களின் 1362 பொன்மொழிகளின் அரிய தொகுப்பு.
நம்பிக்கை:
பெரிய நம்பிக்கைகளே பெரிய மனிதர்களை உண்டுபண்ணியிருக்கின்றன.
நம்பிக்கை இல்லாதவனே வாழும் மாந்தரில் மிகப்பெரும் வறிஞனாவான்.
தள்ளி வைக்கப்படும் நம்பிக்கை இருதயத்தைப் பிணிக்கிலக்காக்குகிறது.
துன்பத்தில் நம்முடைய ஒரே ஆறுதல் நம்பிக்கைதான்.
எதனையும் துன்பமாய் நினையாது நம்பிக்கை. அத்துன்பத்தை வெல்ல இயலாதென்று கூறும் மனத் தளர்ச்சி.
நம்பிக்கை இளம் விருப்பின் தாதியாகும்.
இரவு மிக அதிகம் இருண்டால் உதயம் மிக அருகே வரும்.
நம்பிக்கையில்லாவிட்டால் முயற்சி ஏது?
வாழவேண்டும் என்னும் விருப்பத்தை வளர்ப்பது நம்பிக்கை.
நம்பிக்கையை நீ பணம் கொடுத்துப் பெற முடியாது.