book

விளிம்பு நிலை மார்க்ஸ் (தேசியவாதம், இனவாதம், மேற்கல்லாத சமூகங்கள்)

₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கெவின் அன்றர்சன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :மொழிபெயர்ப்பு
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

இது கீழை நாடுகள் பற்றிய நூல். விளிம்பு நிலையிலுள்ள சமூகங்களைப் பற்றிய மார்க்ஸ் ஏங்கெல்சின்) எழுத்துக்கள் எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. எப்படி? இந்தியா, இந்தோனேரியா, அல்ஜீரியா, சீனா, ரஷ்யா, போலந்து, அயர்லாந்து ஆகிய நாடுகளின் சமூக அமைப்புகள், அந்நாடுகளில் 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து எழுந்த காலனிய எதிர்ப்பு இயக்கங்கள், தேசிய இன, விடுதலை எழுச்சிகள், 1860 களில் தொடங்கிய அமெரிக்க உள்நாட்டுப் போர் எனப்படும் கறுப்பின மக்கள் போராட்டங்கள் ஆகியன றிய மார்க்சின் மதிப்பீடுகள் இவ்வியலில் பேசப்படுகின்றன. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மையம் கொண்டிருந்த முதலாளிய சமூகம் பற்றிய பொருளாதார எழுத்துக்களுக்கு வெளியே, ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டினும் வேர் கொண்டிருந்த காலனிய எதிர்ப்பு, தேசிய எழுச்சிகள் ஆகியவை இங்கு கவனம் பெறுகின்றன. இப்பிரச்சினைகள்தாம் இந்நூலுக்கு விளிம்பு நிலை மார்க்சியம் என்ற பெயரை வழங்குகின்றன. அரசியல் பொருளாதாரம், மூலதனம் போன்ற நூல்களின் வழி அறியப்பட்ட மார்க்சியத்திலிருந்து வேறுபட்ட பூகோளப் பரப்பின் தென்பகுதிர் சூழல்களுக்குப் பொருந்தக்கவடிய சில கருத்துருக்கள் மார்க்சிடம் அக்காலத்திலேயே தோன்றிவிட்டலா என்பதை முன்வைத்து இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்தியச் சமூகத்தின் தனித்த பண்புகள், வர்க்க அரசியலும் அடையாள அரசியலும், பொருளாதார அரசியலும் பண்பாட்டு அரசியலும், வரிக்கமும் சாதியும், இவற்றை ஒன்றுக்குள் ஒன்றாக உள்ளடக்குவதா, தொருத்திணைப்பதா? தெற்கு முன்னுரிமை கொடுப்பது? என்றெல்லாம் விவாதங்கள் நடத்தி வரும் நம் போன்றோருக்கு இந்நூலும் இந்நூல் சுட்டிக்காட்டும் மார்க்கின் எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்நூலைப் படிக்கும்போது, மார்க்ஸ் என்ற புரட்சிக்காரரின் மேதமை மார்க்சியத்தின் கோட்பாட்டுச் செழுமை ஆகியவை குறித்த மலைப்பு மேலிடுகிறது. உலகமயமாக்கம், பின்னைக் காலனியம் ஆகிய நழல்களில் உலக முதலாளியத்தின் தலைவிதி இனி ஆரிய ஆப்பிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளில் தான் முடிவாரும் என்ற கருதுகோள் கெவின் ஆன்றர்சன்னின் நூலில் இடம் பெற்றிருப்பதாகத் தோன்றுகிறது.