book

ஆடும் மயில்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அழ. வள்ளியப்பா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :222
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123426952
Add to Cart

ஆண் மயில் தோகை விரித்து ஆடுவது, பெண் மயிலை கவர்வதற்குத்தான் என்பது தெரிந்த விஷயம். ஆனால், பெண் மயில்கள் அருகே இல்லாத போதும் தோகையை விரித்து சோம்பல் முறிப்பதுண்டு. எனவே, இனக் கவர்ச்சி நோக்கத்தோடு ஆண் மயில் தோகையை விரிப்பதில் கூடுதல் சமிக்ஞைகள் இருப்பதாக சொல்கின்றனர் இயற்பியலாளரான சூசன் அமாடோர் கானே. அமெரிக்காவின் பென்சில்வேனியாவிலுள்ள ஹாவெர்போர்ட் கல்லுாரியைச் சேர்ந்த இவர், விலங்குகளின் சமிக்ஞை முறையை ஆராய்பவர்.
இதனால், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆராய்ச்சியாளரான ரோசலின் டாகின் என்பவர் மயில்களைப் பற்றி ஆராய்வதற்கு எடுத்த அதிவேக வீடியோ காட்சிகளை பார்த்த சூசன் வியப்பில் ஆழ்ந்தார். ஆண் மயில், பெண் மயிலை கவர்வதற்காக தோகையை விரிக்கும்போது, தோகையின் இறகுகளில் உள்ள கண்கள் போன்ற அழகிய வடிவமைப்பு அப்படியே நிலைத்திருக்க, தோகை மற்றும் பின் வால் பகுதிகள் சடசடவென்று அதிர்ந்து, படபடக்கும் ஓசையை ஏற்படுத்துகின்றன. தோகை பெரிதாக உள்ள ஆண் மயில், இன்னும் கூடுதல் வேகம் மற்றும் ஓசையுடன் தோகையை
படபடக்கிறது. எனவே, தோகையில் உள்ள கண்கள் போன்ற வடிவமைப்பின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது, படபடக்கும் வேகம் அதிகமாக இருப்பது, ஓசை அதிகமாக இருப்பது ஆகியவற்றைப் பொறுத்து பெண் மயில்கள் சொக்கிப் போய் இனப்பெருக்கத்திற்கு சம்மதிக்கின்றன என்று சூசனும், ரோசலினும் முடிவுக்கு வந்திருக்கின்றனர்.இவர்களது ஆய்வு, சமீபத்திய, 'ப்ளோஸ் ஒன்' இதழில் பதிப்பிக்கப்பட்டு உள்ளது.