
தோழர் ப. மாணிக்கத்தின் தியாக வாழ்வு
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :105
பதிப்பு :1
Published on :2022
ISBN :9788123441900
Add to Cartபொதுவாழ்வில் ஒரு மாணிக்கம் என்று தினமணி நாளிதழ் தலையங்கத்தால் பாராட்டப்பெற்ற
தோழர் ப.மாணிக்கத்தின் நூற்றாண்டு
விழாத் தருணமிது. தன்னலங் கருதாது தமிழ்ச் சமூகத்திற்காகவே வாழ்ந்து மறைந்திட்ட சமரசமற்ற மார்க்சியப் போராளி ப.மாணிக்கத்தின் நூற்றாண்டைக் கொண்டாடும் விதமாகவும், அவரது எழுத்துக்களையும் அப்பழுக்கற்ற அவரது வாழ்க்கைச் செயல்பாடுகளையும் நினைவு கூறும் விதமாகவும் எமது நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தால் தோழர் ப.மாணிக்கத்தின் தியாக வாழ்வு எனும் இந்நூல் தொகுக்கப் பட்டுள்ளது.
தான் ஒரு கம்யூனிஸ்டாகத் தன் வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதைப் பற்றி அதன் நியாய விளக்கங்களுடன் தோழர் ப.மாணிக்கம் எழுதிய கட்டுரை இத்தொகுப்பில் முதலில் இடம்பெற்றுள்ளது.
அவருடன் பணியாற்றிய சக தோழர்களான பி.சீனிவாசராவ்,
ப.ஜீவானந்தம்,ஏ,எஸ்,கே,
கே.பாலதண்டாயுதம் ஆகியோரின் போராட்ட வரலாற்றை உயிரோட்டத்துடனும் செறிவுடனும் ப.மாணிக்கம் அவர்கள் எழுதியகட்டுரைகள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
தமிழகத்து கம்யூனிஸ்ட் முன்னோடிகளான
இத் தோழர்களைப் பற்றிய
அவரது கட்டுரைகள்
'மிகவும் ஆதாரமானவை' என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்கள் 'தேர்ந்தெடுத்த வழி ' எனும் நூலுக்கு எழுதிய அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.
ஜனசக்தி எனும் நாளிதழ் உருவாக்கி பல்வேறு தடைகளுடனும் இடையூறுகளுடனும் வளர்ந்த வரலாற்றைப் பற்றிய தோழர் ப.மாணிக்கத்தின் ஆழமான தகவல்கள் உள்ளடக்கிய கட்டுரை
சொல்லும் செய்திகள் மிக மிக கனமானவை
உலகத் தமிழ் மாநாடு குறித்தும் பிரெஞ்சிய விடுதலை இயக்கம் குறித்தும் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகளும் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஜனசக்தி நாளிதழில் பணியாற்றிய
தோழர் அறந்தை நாராயணன் அவர்கள்
தோழர் ப.மாணிக்கத்தின் மறைவிற்குப் பிறகு
2000 ஆவது ஆண்டில் ப.மாணிக்கத்தின் கட்டுரைகளைத் தொகுத்து தேர்ந்தெடுத்த வழி எனும் தலைப்பில்
சிறு நூலொன்றை வெளியிட்டிருந்தார்.அந்நூலில் இடம்பெற்றிருந்த தோழர்.ப.மாணிக்கத்தின் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
2007 ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டக் குழு சார்பில் வெளியிடப்பட்ட ப.மாணிக்கத்தின் தியாக வாழ்வு எனும் நூலில் ப.மாணிக்கம் குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஆர்.நல்லக்கண்ணு,பேராசிரியர்.
ஆ.சிவசுப்பிரமணியன், முனிவர்.மே.து.இராசுக்குமார் ஆகியோர் எழுதியிருந்த கட்டுரைகளும்
இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
பதினைந்து ஆண்டு காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராகப் பொறுப்பேற்று தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்காக நேர்மையாகவும் சீர்மையாகவும் செயலாற்றிய செழுமையானதொரு போராளியின் பன்முக ஆளுமையைப் புரிந்துகொள்ளும் வகையில் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் தோழர்.ப.மாணிக்கம் எனும் கம்யூனிஸ்ட் போராளியின் லட்சிய வாழ்வை அழுத்தமாகப் பதியவைப்பதே இந்நூலின் நோக்கமாகும்.
