
மனுஷ்ய புத்திரன் எளிய மனங்களின் பாணன்
₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். அபிலாஷ்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789393650139
Out of StockAdd to Alert List
தமிழில் உன்னதமானவை எனக் கருதப்பட்ட நவீனக் கவிதைகளில் இருந்து முழுக்க வேறுபட்ட பாதையைத்தேர்ந்து கொண்டு முப்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருபவர் மனுஷ்ய புத்திரன். நீதி மறுக்கப்படும் ஒரு தனி மனிதனின் சித்திரத்தில் இருந்து அவனுடைய அகவுலகின் தத்தளிப்புகளை அவர் ஆயிரக்கணக்கான கவிதைகளில் எழுதிக் குவித்திருக்கிறார்.அவை பின்நவீன மனத்தின் பிரேமைகளையும் அலைகழிப்புகளையும் பதிவுசெய்கின்றன. நடப்பு நிகழ்வுகள் குறித்த ஒரு செய்தியை இந்தச் சிக்கலான கவிதைத் தளத்தில்வைத்து முற்றிலும் ஒரு புதிய பரிமாணத்தை அவரால் திறந்து காட்ட முடிகிறது.
