book

அதோ அந்த பள்ளிக்கூடந்தான்

Atho antha pallikudamthan

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. சுரேஷ்
பதிப்பகம் :அறம் பதிப்பகம்
Publisher :Aram Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :90
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194179269
Add to Cart

சிறந்த பாடகர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்ட மா. சுரேஷ் அவர்கள், மா.சு என்று நெருக்கமான நட்பு வட்டத்தினாரால் அழைக்கப்படுபவர். இவர் 14.05.1969ல் முதல் இந்தியச் சிப்பாய் புரட்சி நடைபெற்ற வேலூர் கோட்டைக்கு அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற சிஎம்சி மருத்துவமனையில் பிறந்தவர். வேலூரைப் பூர்வீகமாகக் கொண்டவர். இவரது பெற்றோர்களான மார்க்கபந்து - ரங்கநாயகி தம்பதியரைப் போலவே இவரும் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். முதுகலை ஆங்கிலம், சமூகவியல், பொருளாதாரம் மற்றும் உளவியல் பட்டங்களுடன், இளங்கலை கல்வியியல் மற்றும் பல பட்டயங்கள், பட்டங்களுக்குச் சொந்தக்காரர் இவர். வேலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் இளங்கலைப் பட்டதாரி ஆங்கில ஆசிரியராகச் பணி செய்து வருகின்றார். கூடுதலாக, ‘நிம்மதி நிலையம்’என்னும் பெயரில் ஆங்கிலம், சட்டம் மற்றும் உளவியல் தளங்களில் இலவச ஆலோசனை வழங்கி வருகின்றார். ‘அம்மா என்னை மன்னித்துவிடு, ‘வாழ்க்கை என்னும் நதியில்’, ‘காஷ் 50’ ஆகிய நூல்கள் இவரது முந்தையப் படைப்புகள். ‘அதோ அந்தப் பள்ளிக்கூடந்தான்’ இவரது நான்காவது படைப்பாகும். சமரம் இதழில் தொடர்ந்து எழுதி வருகின்றார்.