book

காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும் (தொகுதி 2) காந்தி ஒரு புதிர்?

₹200+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. மார்க்ஸ்
பதிப்பகம் :எழுத்து
Publisher :Ezhuttu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2022
Out of Stock
Add to Alert List

காந்தி ஒரு புதிர் என இத்தொகுப்பு தொடங்குகிறது. ஆம். நாம் அவரைப் புரிந்து கொள்ளாதவரை அவர் நமக்கு ஒரு புதிர்தான். காந்தி வருண முறையை ஆதரித்தாரே என்பர் சிலர். இல்லை அவர் தொடக்கத்தில் ஆதரித்தார். ஆனால் பின்னாளில் அதைக் கைவிட்டார் என்பார்கள் மற்றவர்கள். ஆனால் மிகவும் நெருக்கமாகப் பார்க்கும்போதே அவர் தென் ஆப்ரிகாவில் இருந்த காலத்திலிருந்தே வருண சாதி முறையைக் கடைபிடிக்காதது தெரியும். சாதி வேறுபாடுகள் அற்ற கம்யூன் முறையை அங்கு அவர் செயல்படுத்தினார். மலம் அள்ளுவது உட்பட எல்லோரும் அங்கே எல்லா வேலைகளையும் பகிர்ந்து கொண்டனர். முதலாளிய நவீனத்துவத்தின் மீதான கடும் விமர்சனம், சத்தியாக்கிரகம் எனும் அமைதி வழிப் போராட்ட வடிவம், அகிம்சை எனும் அணுகல்முறை, பன்மைத் தன்மைக்கு அடையாளமான இந்தியா எனும் கருத்தாக்கம் ஆகியவற்றுடன் களம் புகுந்த அவரைக் கண்டு வெள்ளை ஏகாதிபத்தியம் மட்டுமல்ல, அரசியல் சாதுக்களுக்கான இடமல்ல என முணுமுணுத்தவர்களும் அதிர்ந்தனர்.