book

கோத்திரங்கள் வரலாறு

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்தான குருக்கள்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :பக்திநூல்கள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

உலகில் மனிதப் பிறவி எடுப்பது சிறப்பு எனப்படும். மனிதர்களை வழிமுறையாகவும், பாரம்பரியமாகவும் அறிந்துகொள்ளும் வழிமுறையே கோத்திரம் என்று சொல்லப்படுகிறது எனலாம்.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் அவர்கள் மூதாதையர்கள் பற்றி ஓரளவே தெரிந்திருக்கும். தந்தை, பாட்டன், பூட்டன் என மூன்று தலைமுறைகள் நினைவில் கொள்வதே சிரமமாக உள்ளது. அந்த குடும்பத்திற்கு முதல் தலைமுறை  யார்? என்பதை குறிப்பிடுவதே கோத்திரம் எனலாம்.

கோயிலில் அர்ச்சனை செய்ய அர்ச்சகரிடம் கேட்டால் அவர் முதலில் கேட்பது உங்கள் கோத்திரம் என்ன? என்பதாகும். பலருக்குக் கோத்திரம் தெரிவதில்லை. நமஸ்காரம் செய்யும்போது, "அபிவாதயே" என்று சொல்லி ஆரம்பித்து தன் கோத்ர பிரவரம், அடுத்து தன் கோத்திரம் சொல்லி இன்ன சூத்திரம், இன்ன வேத சாகை உடைய இன்ன பெயருடையவன் நமஸ்கரிக்கிறேன் என்று சொல்லவேண்டும். நால்வகை வருணத்தாருக்கும் கோத்திர பிரவரம் உண்டு. பிரவரம் என்பது கோத்திர மூலரிஷிகள் வழிவந்த மற்ற குலமுதல்வர்களான ரிஷிகள். ஆனால் இப்போது பெரும்பாலும் பிராமணர்கள் மட்டிலுமே இதை கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் எல்லோருக்கும் கோத்திரம் தெரிந்தாலும் பிரவரம் தெரிவதில்லை. வைதிக வாத்தியார்களை கேட்டு அறிய வேண்டியுள்ளது. அவர்களுக்கும் எல்லா கோத்திர பிரவரங்களும் தெரிவதில்லை.

மற்றைய வர்ணத்தார் ஒரு சிலர் கோத்திரம் அறிந்து சொல்கின்றனர்.

இதுபற்றி முழுமையான தகவல்களுடன் ஒரு நூல் செய்யும்படி, அல்லயன்ஸ் புத்தக பதிப்பக உரிமையாளர் திரு.ஸ்ரீநிவாஸன் அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்நூல் எழுதப்பட்டது. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த அன்னாருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் தந்தை, தாய், என் குருமார்கள் ஆகிய அனைவரின் தாள் பணிந்து இந்நூலை எழுத முற்படுகிறேன். காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ மஹாபெரியவா, என் சிறுவயதில் என்னை ஆசிர்வதித்து, 'வேத சாஸ்திரங்கள் படி உனக்கு அவை நன்கு வரும்.' என்று அருளினார்கள். அந்த அருளாசியின் துணையினால் இந்நூல் எழுதத் துணிந்தேன். குறை சுட்டி, நிறை பாராட்டி ஆதரிக்குமாறு பணிவுடன் விண்ணப்பித்து தொடங்குகிறேன்.