book

கண்டறியாதன கண்டேன்

₹290+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :383
பதிப்பு :3
Add to Cart

கி.வா.ஜ. அவர்களின் தமிழ் நடையில் கடினம் இருக்காது; ஆனால் கன்னித் தமிழ் மிளிரும்படி ஒரு கலைஞன் தியாகம்  இருக்கும். காவியத்தை   ஓவியமாக்கி, சித்திர மேகலையுடனை இலங்கைக்  காட்சிகளைக் காட்டி, தமிழுக்கு ஒரு புதுமெருகு ஊட்டி, தமிழை ஒரு அதிசயப் பெண்ணாக்கி, விளையும் பயிர் முதல் பெரிய புராணம் வரை பேசியிருக்கிறார், வாழும் தமிழாக எழுதியிருக்கிறார்.

இவரது முருகன் பெருமையையும், கந்தவேள் கதையமுதத்தையும் படிக்கும் தமிழ் அன்பர்களின் ஒரு சாண் வயிறு கண்டிப்பாக நிரம்பி விடும் தன்மை கொண்டது. தமிழ் நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றி கூறும் போது, அது அறுந்த தந்தியாக இல்லாமல். பவழ மல்லியாக மணக்கும், நவக்கிரகம் போல நிரம்பி வழியும் ஆற்றல் படைத்தது. கிழவியின் தந்திரத்தை சகல கலா வல்லியாக மாற்றிய நாம் அறிந்த கி.வா.ஜ, சின்ன ராஜா அல்ல; ஒரு ஆத்ம ஜோதி. இவருடைய நாடோடிப் பாடல்களும், தமிழ்ப் பழமொழிகளும், வாழ்க்கைச் சுழலை கண்டறியாதன கண்டேன் என்று விளக்கி, நமக்கு அமுத மொழியினால் தமிழ் உதயத்தைக் காட்டிய அகஸ்தியர்.