book

அரசியல் எது? என்ன? ஏன்? எப்படி?

₹199+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் எம்.வி. துரைஸ்
பதிப்பகம் :சோசியல் எகனாமிக் ரிசெர்ச் அகாடமி
Publisher :Social Economic Research Academy
புத்தக வகை :ஆய்வுக் கட்டுரைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2024
Add to Cart

டாக்டர் எம்.வி. துரைஸ் l'hl) (அரசியல்) பதினைந்து ஆண்டு காலமாக மாணவர்களுக்கு அரசியல் பாடம் எடுத்து வருகிறார். அரசியல் கலைக்களஞ்சியம் என்று மாணவர்களால் அன்பாக அழைக்கப்படுபவர். நவீன அரசியல் சிந்தனையாளர்களில் முக்கியமானவர். பாமர மக்களுக்கும் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதை தன் வாழ்க்கை லட்சியமாகக் கொண்டு செயல்படும் அரசியல் அறிஞர். நாம் பேச்சு வழக்கில் நாவல்கள் படித்திருப்போம்; சிறுகதைகள் படித்திருப்போம்; தலைவர்களின் வாழ்க்கை வரலாறு கூட படித்திருப்போம். ஆனால், பேச்சு வழக்கில் அரசியல் தத்துவங்கள் படிக்க தேர்ந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்விக்கு விடையாக எடுக்கப்பட்ட ஒரு நவீன முயற்சியின் வெளிப்பாடே இந்த நூல், அரசியலைப் பற்றி சாதாரண மக்களும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கதைகளுடனும், எடுத்துக்காட்டுடனும் பேச்சு வழக்கில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. அரசியலைப் பற்றிய தவறான பிம்பத்தை இப்புத்தகம் உடைத்தெறிந்து, சரியானப் பார்வையை உருவாக்க முயற்சிக்கிறது. இந்தப் புத்தகம் படிக்கும் சிலரை 'அடப்பாவிகளா... இதுதானாடா அரசியல்!' என்று புருவம் உயர்த்தவும் வைக்கலாம்; இல்லையென்றால், 'அப்போ... அரசியல்னா இது இல்லையா!' என்று ஆச்சரியமும் படுத்தலாம். இது உங்களை ஆச்சரியப்படுத்துகிறதோ இல்லையோ, ஆனால் கண்டிப்பாக நிறைவான அரசியல் அனுபவத்தைத் தரும். இது நிச்சயமாக ஓட்டுப் போடும் அனைவரும் வாழ்க்கையில் ஒருமுறையாவது படிக்க வேண்டிய அற்புதமான புத்தகம்!