தமிழ் இலக்கியக் கதைகள்
₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ச.கு. கணபதி ஐயர்
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :150
பதிப்பு :7
Published on :2015
Add to Cartசரமாகத் தொடுக்கும் பூக்களைவிட ஆரமாக அணியும் பூக்களை விட, மாலையாக அணியும் மலர்களைவிடப் புதுமை நலங்குன்றாமல் உதிர்ந்த உதிரிப் பூக்களை அப்படியே திரட்டி நுகர்வது சுவையான அனுபவத்தைத் தரக் கூடியது. உதிரிப் பூக்களின் பலம் அவை உதிரியாக இருப்பதுதான். உதிரியாகவும் தனித்தனியாகவும் இருப்பதே ஒரு வகையில் அவற்றின் சிறப்பு.தமிழ் இலக்கிய வரலாற்றில் புறநானூறு போன்ற தொகை நூல்களில் உள்ள பாடல்களே உதிரிப் பூக்கள்தான். அவற்றைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும்தான் பின்னாட்களில் ஒரு தொகுதியாக்கினார்கள். ‘புறம்’ என்னும் ஒரு பொருள் தொடர்பில் அவை தொகுக்கப்பட்டதுபோல் பொருள் தொடர்பு இல்லாத பல உதிரிப் பாடல்கள் பிற்காலத்துத் தனிப்பாடல் திரட்டிலும் பெருந்தொகையிலும் உள்ளன. இந்நூல்களில் பல பாடல்கள் அதுபவத்தின் விளைவுகள்.