book

சந்திரகாந்தா (துப்பறியும் நாவல்)

₹190+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜே.ஆர். ரங்கராஜன்
பதிப்பகம் :கலா நிலையம்
Publisher :Alliance Publications
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :296
பதிப்பு :18
Published on :2015
Add to Cart

ஆசிரியர் குறித்து: ஜே.ஆர்.ரங்கராஜு ( 1875-1959) வின் முழுப் பெயர்: ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு. இவர் ஒரு தமிழ்ப் புதின எழுத்தாளர். தமிழ் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். பல புகழ்பெற்ற துப்பறியும் புதினங்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாடு, பாளையங்கோட்டையில் 1875 இல் பிறந்தார். 1908 முதல் புதினங்கள் எழுதத் தொடங்கினார். திருவல்லிக்கேணி துப்பறியும் கோவிந்தன், இவர் உருவாக்கிய புகழ்பெற்ற துப்பறிவாளர் பாத்திரம். சவுக்கடி சந்திரகாந்தா எனும் புரட்சிப்பெண் பாத்திரத்தையும் உருவாக்கினார். இவரது புதினங்களில் கோயில்களில் நடக்கும் முறைகேடுகள், பெண் விடுதலை போன்ற சமூக சீர்திருத்தக் கருத்துகள் காணக் கிடைக்கின்றன. மொத்தம் எட்டு துப்பறியும் புதினங்கள் எழுதியுள்ளார். அவை பலமுறை மறுபதிப்பு கண்டுள்ளன. இராஜாம்பாள் 23 பதிப்புகள், சந்திரகாந்தா 13 பதிப்புகள், மோஹனசுந்தரம் 12 பதிப்புகள், ஆனந்தகிருஷ்ணன் 10 பதிப்புகள், ராஜேந்திரன் 9 பதிப்புகள், வரதராஜன் 2 பதிப்புகள் வெளிவந்தன. மொத்தம் 70,000 பிரதிகளுக்கு மேல் விற்பனையாகின. இராஜாம்பாள் புதினம் மேடை நாடகமாக்கப்பட்டது. இவரது நூல்களை 2009 இல் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியது.

இவர் 1910களில் வெளியான “கிரிஷிகன்” என்னும் இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார். ரங்கராஜூ ஒரு வேளாண்மைக்காரரும் வர்த்தகரும் கூட. சென்னை கிண்டி, ராஜ் பவன் மாளிகைக்கு எதிரில் அமைந்திருந்த அவரது “ராஜூ தோட்டம்” புகழ் பெற்றது.

திரைப்படங்கள்: ஜேயார் ரங்கராசுவின் இராஜாம்பாள் புதினம் 1935 இலும், 1951 இலும் இருமுறை திரைப்படமாக்கப்பட்டது. சந்திரகாந்தா புதினம் 1936 இல் திரைப்படமாக்கப்பட்டது.

புதினங்கள்: ராஜேந்திரன்; இராஜாம்பாள்; மோஹனசுந்தரம்; ஆனந்தகிருஷ்ணன்; சந்திரகாந்தா; வரதராஜன்; விஜயராகவன்; ஜெயரங்கன்.

ஜே.ஆர்.ரங்கராஜு அவர்களைப் பற்றிய விமர்சனங்கள்: ஸ்ரீமான் ரங்கராஜுவின் தமிழ்நடை பேசும் நடை; எனவே உயிருள்ள நடை. அவருடைய நாவல்கள் தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டதற்கு இது ஒரு முக்கிய காரணமென்பதில் சந்தேகமில்லை. - கல்கி.

“ ஆங்கில நாவல்களை ஆரணியார் நேராக மொழி பெயர்த்துத் தந்தார். ஐயங்கார் அந்நாவல்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு தம் கற்பனைகளையும் சேர்த்து வருணனைகளைப் புகுத்தித் தம் சொந்தச் சரக்குப் போலத் தரமுயன்றார். ரங்கராஜு அவற்றைத் துப்பறியும் கதைகளாக மாற்றிக் கொடுத்தார்” - ஒரு ‘கலைமகள்’ கட்டுரையில் நாரண. துரைக்கண்ணன் சொல்கிறார்.