
ஜெயலலிதா
₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வலம்புரிஜான்
பதிப்பகம் :நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
Publisher :Nakkheeran Publications
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :192
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789385125997
Out of StockAdd to Alert List
திருச்சி ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதாவின் தாய்வழிக் குடும்பம் நெல்லுாரில் ரொம்ப காலம் வசித்தவர்கள். மத்திய தர குடும்பம். ஜெயலலிதாவின் தாய் சந்தியாவோடு (நிஜப்பெயர் வேதவல்லி) பிறந்தவர்கள் 3 பேர். சீனிவாசன், அம்புஜா என்கிற வித்யாவதி மற்றும் பத்மா. சந்தியாவின் பெற்றோர் ரங்கஸ்வாமி ஐயங்கார் - கமலம்மாள். பின்னாளில் குடும்பச் சூழலால் நெல்லுாரிலிருந்து சந்தியாவின் குடும்பம் பெங்களுருக்குக் குடிபெயர நேர்ந்தது.
சந்தியாவின் தந்தை அங்குள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் லிமிடெட் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியில் சேர்ந்தார். சந்தியாவிற்கு 14 வயதாகும்போது அவருக்கு அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையாரின் அரண்மனை மருத்துவர் டாக்டர் ரங்காச்சாரியின் மகன் ஜெயராமுடன் திருமணம் நடந்தது. ரங்காச்சாரி மைசூரில் மிகப் பிரபலமான மருத்துவர். அந்தக்காலத்திலேயே ஆபரேஷனுக்கு 100 ரூபாய் கட்டணம் வாங்கியவர். தன் மருத்துவச் சேவைக்காக பிரிட்டிஷ் அரசிடமிருந்து 'ஸிப்பர் ஃபீல்ட்' விருதைப் பெற்றவர். சந்தியா - ஜெயராம் தம்பதிக்கு இரண்டாவது குழந்தை 1948 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி மைசூரில் பிறந்தது. மைசூர் அரண்மனையில் சிறப்பான சேவையாற்றியதற்காக அரண்மனை வாரிசுகளுக்கே உரிய பெயரின் முன் ஜெய என்று சேர்க்கும் பெருமைமிக்க தகுதியை மன்னர் ரங்காச்சாரி குடும்பத்திற்கு வழங்கியிருந்தார். அதன்படி குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டது. குடும்ப வழக்கப்படி கோமளவல்லி என்ற பெயரிலும் குழந்தையை அழைத்தனர். ஆயினும் குடும்பத்தினர் அம்மு என்றே செல்லமாக அழைத்தனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார்.
