book

அஷ்டா தச புராணங்கள் என்னும் பதினெண் புராணங்கள்

₹650
எழுத்தாளர் :கீழ்க்கோவளவேடு கிருஷ்ணமாச்சார்யார்
பதிப்பகம் :நர்மதா பதிப்பகம்
Publisher :Narmadha Pathipagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :640
பதிப்பு :1
Published on :2013
ISBN :9789386209702
Add to Cart

புராணம்' என்ற சொல்லுக்கு பழமை, பழங்கதை, பழைய வரலாறு, மறைகள் கூறும் செய்திகளை வலியுறுத்திக் காட்டும் கதைகள் என்று விளக்கம் தரலாம். வியாசர் வடமொழியில் 'புராண சம்ஹிதை' என்றொரு நூலை இயற்றியதாகவும், அதன் வழி நூலாகத் தோன்றியவையே 'பதினெண் புராணங்கள்' என்றும் ஒரு கருத்து கூறப்படுகிறது.

வியாசர் என்பது ஒரு தனி நபர் பெயரா? அது ஒரு குடும்பப் பெயரா? அல்லது பட்டமா? என்ற ஐயப்பாடும் உள்ளது. மேலும் மன்வந்தரங்கள் பலவற்றில், 28-ஆவது மன்மந்தரத்தில் வாழ்ந்தவரே இந்த வியாசர், இவருடைய இயற்பெயர் கிருஷ்ண துவைபாயனர் என்றும், வேதங்களைத் தொகுத்தவர் என்பதால் தேவதவியாசர், அல்லது வியாசவேதர் என்ற பெயர் அவருக்குண்டு என்பதும் அறியலாகிறது. ஒவ்வொரு மன்வந்தரத்தில் ஒவ்வொரு வியாசர் இருந்ததாகவும் ஒரு புராணப்பட்டியல் காட்டுகிறது