book

பூஞ்சோலைக் கிளியே...!

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இன்பா அலோசியஸ்
பதிப்பகம் :அருண் பதிப்பகம்
Publisher :Arun Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :396
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

“எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு. நம்ம குடும்பத்தோட மொத்த சந்தோஷமும் இப்போ நம்ம கையில்தான் இருக்குன்னு நினச்சுக்கோங்க. விலகிப் போகாமல், இழுத்துக் கட்ட வேண்டிய நேரம் இது. எழுந்து போயா...” அவனைப் பிடிவாதமாக எழுப்பினாள்.
“மதி... உனக்கு என்மேல் எந்தக் கோபமும் இல்லையே...” உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் கேட்டான்.
“கோபம் இல்லன்னு சொன்னா அது பொய்... ஆனா... உன்னைய இப்போ தனியா விட்டா நான் மனுஷியே இல்ல. அவமானப்பட்ட...” சற்றுத் தடுமாறி, “அவமானப்பட்ட என் அண்ணனே நித்திக்கு வேண்டி வந்து நிக்கும்போது, எனக்கென்ன? நீ போயா... நான் வர்றேன்...” அவள் சொல்லவே, அவளைப் பார்த்தவாறே திரும்பிச் சென்றான்...