book

சிலம்பு பிறந்த கதை

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :விபோ புக்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :100
பதிப்பு :3
Out of Stock
Add to Alert List

ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்ருகிய சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள். காப்பியத்தின் மூன்ரும் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரே வருகிருர். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையே இனிமையானது. -

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின் திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள் இந்தக் காவியத்தை இயற்றினர். செங்குட்டுவன் அமைத்த கற்கோயில் இப்போது இருக்கிற இடம் தெரியவில்லை. ஆளுல் இளங்கோவடிகள் இயற்றிய சொற் கோயிலாகிய சிலப்பதிகாரக் காப்பியம் இன்றும் மெருகழியாமல், அழகு குலையாமல் தமிழர்களுக்கு இலக்கிய விருந்தாய் நிலவு கிறது.