book

விடுதலைக்குப் பின் இந்திய வரலாறு தொகுதி 5

₹420+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் ந.க. மங்கள முருகேசன்
பதிப்பகம் :பழனியப்பா பிரதர்ஸ்
Publisher :Palaniappa Brothers
புத்தக வகை :மாணவருக்காக
பக்கங்கள் :835
பதிப்பு :2
ISBN :9788183796118
Add to Cart

உடல் அமைப்பில் நவீன மனிதர்களானவர்கள் இந்தியத் துணைக் கண்டத்திற்கு 73,000 மற்றும் 55,000 ஆண்டுகளுக்கு முன்னர் முதன் முதலில் வருகை புரிந்தனர்.[1] தெற்காசியாவில் தொடக்க காலத்தில் அறியப்பட்ட மனித எச்சங்களானவை 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் காலமிடப்படுகின்றன. தெற்காசியாவில் நிலையான வாழ்க்கையை வாழும் முறையானது பொ. ஊ. மு. 7,000-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கியது. பொ. ஊ. மு. 4,000-ஆம் ஆண்டு வாக்கில் நிலையான வாழ்க்கை வாழும் முறையானது பரவத் தொடங்கியது.[2] இது படிப்படியாக சிந்துவெளி நாகரிகமாகப் பரிணாமம் அடைந்தது. பழைய உலகத்தில் மூன்று தொடக்கால நாகரிகத் தொட்டில்களில் இதுவும் ஒன்றாகும்.[3][4] இது பொ. ஊ. மு. 2,500 மற்றும் பொ. ஊ. மு. 1,900-க்கு இடையில் தற்கால பாக்கித்தான் மற்றும் வடமேற்கு இந்தியாவில் செழித்திருந்தது. பொ. ஊ. மு. இரண்டாம் ஆயிரமாண்டின் தொடக்கத்தில் தொடர்ச்சியான வறட்சியானது சிந்துவெளி மக்கள் பெரிய நகர மையங்களிலிருந்து சிறிய கிராமங்களாகச் சிதறுவதற்குக் காரணமானது. அலை போன்ற பல்வேறு புலப்பெயர்வுகளில் நடு ஆசியாவிலிருந்து பஞ்சாப் பகுதிக்குள் இந்திய-ஆரியப் பழங்குடியினங்களானவை நகர்ந்தன. அவர்களது விரிவான சமயப் பாடல்களின் தொகுப்புகளைத் தொகுத்ததன் (வேதம்) மூலம் வட இந்தியாவின் வேத மக்களின் (1500–பொ. ஊ. மு. 500) வேத காலமானது குறிக்கப்படுகிறது. சமூக அமைப்பானது வர்ண அமைப்பின் வழியாக தோராயமாக அமைக்கப்பட்டிருந்தது. அதிகமாகப் பரிணாமம் அடைந்த தற்கால சாதி அமைப்புக்குள் இது இணைக்கப்பட்டது. மேய்ச்சல் மற்றும் நாடோடி வாழ்க்கையை வாழ்ந்த இந்திய-ஆரியர்கள் பஞ்சாபில் இருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவினர். பொ. ஊ. மு. 600 வாக்கில் ஒரு புதிய, பகுதிகளுக்கு இடையிலான பண்பாடானது உருவானது. பிறகு தலைவர்களால் ஆளப்பட்ட சிறிய அரசுகள் (ஜனபாதங்கள்) பெரிய அரசுகளாக (மகாஜனபாதங்கள்) ஒருங்கிணைக்கப்பட்டன. இரண்டாவது நகரமயமாக்கலானது நடைபெற்றது. புதிய துறவு இயக்கங்கள் மற்றும் சமயக் கருத்துருக்களின் வளர்ச்சியுடன் இது நடைபெற்றது.[5] இதில் சைனம் மற்றும் பௌத்தத்தின் வளர்ச்சியும் அடங்கும். பௌத்தமானது துணைக் கண்டத்தின் ஏற்கெனவே இருந்த சமயப் பண்பாடுகளுடன் கலந்து இந்து சமயத்தின் வளர்ச்சிக்குக் காரணமானது.