book

மகா பெரியவா (சிலிர்ப்பூட்டும் வாழ்க்கைக் கதை)

₹332.5₹350 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வீயெஸ்வி
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :95
பதிப்பு :1
Published on :2021
ISBN :9788194946588
Add to Cart

திருவண்ணாமலையில் மொத்தம் மூன்று சிவலிங்கங்கள் இருக்கின்றன. ஒன்று ஜோதிர் லிங்கமான அருணாசல மலை. இரண்டாவது, ரமண ஸ்வாமி, மூன்றாவது சேஷாத்ரி...” என்று மகாபெரியவரால் குறிப்பிடப்பட்டவர் மகான் சேஷாத்ரி சுவாமிகள்.இவருடைய வரலாற்றில் காஞ்சிபுரத்தில் தமது வீட்டில் பூட்டியிருந்த அறையிலிருந்து மாயமாய் மறைந்த நிகழ்வினைப் பற்றி படிக்கும் எவருக்கும் உள்ளம் சிலிர்க்கும். இந்த இல்லத்தைக் கண்டறியப் பிரயத்தனப் பட்ட பரணீதரனுக்கு வழிகாட்டியாக இருந்து வழிநடத்தியவர் மகா பெரியவா. “சேஷாத்ரி சுவாமிகள் வாழ்ந்த வீட்டை நாம் வாங்கிவிடலாமா?” என்று கேட்டு, அதற்காக ஒரு கமிட்டி நிறுவப்பெற்று, தெற்கு வீதி 6–ம் நம்பர் இலக்கமுள்ள அந்த வீடு வாங்கப்பட்டது தனி வரலாறு. ‘ஶ்ரீகாமகோடி சேஷாத்ரி சுவாமிகள் நிவாஸம்’ என்று அந்த வீட்டுக்குப் பெயர் சூட்டினார் மகா பெரியவா. ஶ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் பெரிய திருவுருவப்படம் சென்னை வந்து சேர்ந்ததும் அதை மகா சுவாமிகளிடம் காட்டுவதற்காக தேனம்பாக்கம் எடுத்துச் சென்றார்கள். படத்தின் மிக அருகில் சென்று உட்கார்ந்து அதை உன்னிப்பாக உற்றுப் பார்த்தார் மகா பெரியவா. படத்தில் உள்ளது போலவே கால்களை மடித்து, இடக்கையை முகவாயில் வைத்துக்கொண்டு புன்முறுவலுடன், “இந்த மாதிரிதானே சுவாமிகள் உட்கார்ந்திருக்கார்?” என்று கேட்டாராம் பெரியவா!