book

30 நாள் 30 ருசி

30 naal 30 rusi

₹209₹220 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரேவதி சண்முகம்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சமையல்
பக்கங்கள் :315
பதிப்பு :3
Published on :2008
ISBN :9788189780579
குறிச்சொற்கள் :ஆரோக்கியம், சத்துகள், சமையல் குறிப்பு, உணவு முறை, வழிமுறைகள்
Add to Cart

இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு.
'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் கருதாமல், நாக்குக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் இங்கே ஏராளம்! திருநெல்வேலி என்றால் அல்வா, மதுரை என்றால் புட்டு, திருவையாறு என்றால் அசோகா, கொல்கத்தா என்றால் ரஸகுல்லா என்று ஊர்களையே உணவுப் பொருட்களோடு தொடர்புபடுத்தி நினைவுகூர்கிற ரசனைக்காரர்கள் நாம்.

பெண்களும் வேலைக்குச் செல்கிற அவசர உலகத்தில் சமையல் அறைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்வி தவிர்க்க முடியாதது. அதற்கு ரேவதி சண்முகம் சொல்கிற பதில்தான் அவரது சமையல் குறிப்புகள். மிகவும் எளிய முறையில், செலவு அதிகம் பிடிக்காத வகையில் ரேவதி சண்முகத்தின் குறிப்புகள் அமைந்திருப்பது பாராட்டத்தக்கது.

இவரது முந்தைய புத்தகமான 'முப்பது நாள் முப்பது சமைய'லுக்கு கிடைத்த வரவேற்பைப் பார்க்கும்போது வாசகர்கள் எந்த அளவுக்கு வெரைட்டி பிரியர்களாக இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒரு விடுமுறை நாளின் இளமாலைப் பொழுதுக்கான நொறுக்குத் தீனியாகட்டும், அவசர நாளுக்கான ஃபாஸ்ட் ஃபுட் ஆகட்டும், நிதானமாகச் சமைத்துண்ண ஃபுல் மீல்ஸ் ஆகட்டும் நா நரம்புகளை சிலிர்க்க வைக்கும் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் இருக்கின்றன.

இன்னொரு சிறப்பம்சத்தையும் இந்தக் குறிப்புகளில் நீங்கள் பார்க்கலாம். 'எனக்குத் தெரிந்த சமையல் எல்லாம் வெந்நீர் வைப்பதுதான்' என்று சொல்பவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் படித்து சுவையான அயிட்டங்களைப் படைத்துவிட முடியும் என்பதே அது.

வாருங்கள், வாழ்க்கையை நறுமணமும் சுவையும் மிக்கதாக சந்தோஷமாகத் தொடர்வோம்.