book

இயற்கை வேளாண்மை அடிப்படைத் தேவைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நம்மாழ்வார்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :
பதிப்பு :1
Published on :2020
Out of Stock
Add to Alert List

இந்தியத் துணைக் கண்டத்தில் உழவுத் துறையிலும், உணவுத் துறையிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை இன்று எல்லாப் பிரிவினரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உழவர்கள் தற்கொலையும் வங்கிக் கடன் தள்ளுபடியும் இதனை உள்ளங்கை நெல்லிக்கனியாக புலப்படுத்து கின்றன. | மறுபுறம் இயற்கை வழி உழவாண்மைக்கு உலக அளவில் பெரும் வரவேற்பும் பாராட்டும் கிடைத்துள்ளது. தமிழ் கூறும் நல்லுலகிற்கு இயற்கை வழி உழவாண்மையை விளக்குவதற்கும் விளக்கிச் சொல்வதற்கும் வானகமும், வானகத்து மூ ல வர்களும் நீண்ட காலமாக தொண்டாற்றி வருவது நாடறியும். இப்படி செய்கின்றபோது இவைகளை தொகுத்து ஒரு கையேடாகக் கொடுத்தால் நலமாக இருக்கும் என்ற உழவர்களின் கோரிக்கையும் தொடர்கிறது. உழவர்களின் இந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அவ்வப்போது சில வெளியீடுகள் கொண்டு வந்துள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக இந்தக் கையேடு இயற்கை வழி வேளாண்மை வளர்ச்சிக் கண்டுள்ள நிலையிலும் உழவர்களின் ஆராய்ச்சிகள் தொடர்கின்ற பாணியிலும் வெளிவந்துள்ள உத்திகளை அச்சேற்றி உள்ளது. இந்த புத்தகத்தை பத்திரப்படுத்தி பாதுகாக்க வேண்டாம், படித்துப் பார்த்துப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு கோ. நம்மாழ்வார்