
ஒரு நாளில் உனது பருவங்கள் (இருத்தலின் புத்தகம்)
₹270+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மனுஷ்ய புத்திரன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :232
பதிப்பு :1
ISBN :9789387636866
Out of StockAdd to Alert List
இதை நான் இருத்தலின் புத்தகம் என்று அழைக்கின்றேன். இருத்தல்தான் எத்தனை எத்தனை அர்த்த கனம் பொருந்திய ஒரு சொல். அதற்குத்தான் எவ்வளவு பரிமாணங்கள். இருத்தல் என்பது வெறுமனே மனித இருப்பு மட்டுமல்ல; இந்தப் பிரபஞ்சத்தில் எதெல்லாம் இருக்கிறதோ அவை அனைத்திற்கும் ஒரு தனி இடமும் பொருளும் உண்டு. அந்த இருப்பைக் கண்டறிவதே மானுடப் பேரனுபவம். இந்தக் கவிதைகள், இவற்றை எழுதியவனின் இருப்பைப் பேசுகின்றன. அதேசமயத்தில், அவனுக்கு அருகாமையிலும் தொலைவிலும் இருக்கும் உயிருள்ளவை மற்றும் உயிரற்றவைகளின் இருப்பையும் பேசுகின்றன.இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இருப்பின் வண்ணங்களையும் தனிமையையும், இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றின் இருப்பின் வினோத நடனங்களையும் ஊடுருவிச் செல்கின்றன.
