book

அச்சம் பதற்றம் அழுத்தம்

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் சிவபாலன் இளங்கோவன்
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :112
பதிப்பு :1
ISBN :9789385104602
Out of Stock
Add to Alert List

மருத்துவ அறிவியல் ரீதியாகப் பயம்குறித்து ஆராய்ந்தால், ஸ்டாத்மின் (Stathmin) என்ற மரபணுதான் பயம் உருவாகக் காரணம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இதைக் கண்டறிய உதவியது வழக்கம் போல எலி ஒன்றை வைத்து நடத்திய சோதனைதான். எலிகள் பொதுவாக மிகவும் பயந்த சுபாவம் உடையவை. ஆபத்து பல கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கிறது என்றாலே இங்கே பதற்றமாகி விடும். இந்த ஸ்டாத்மின் மரபணு நீக்கப்பட்ட எலிகள் மிகவும் வித்தியாசமாக செயல்படத் தொடங்கின. எலிகளைப் பொதுவாக பயப்பட வைக்கும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியபோது, அதற்கு இந்த எலிகள் அஞ்சவேயில்லை. அதேசமயம், எலியின் மற்ற செயல்பாடுகள், உடலியல் மாற்றங்கள், இவற்றிற்கெல்லாம் எந்த மாற்றமும் நிகழவில்லை. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் அவ்வப்போது உருவாகும் மன அழுத்தம், ஆளுமைக் கோளாறு, கவலை மற்றும் அனைத்து வகை ஃபோபியாக்கள் குறித்துப் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியது.