book

நினைவாற்றல் நிரந்தரமா?

Ninaivatral Nirandharamaa?

₹110+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.ஏ.வி. ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2008
ISBN :9788183687089
குறிச்சொற்கள் :முயற்சி, திட்டம், உழைப்பு
Add to Cart

எழுத்து வடிவம் : லக்ஷ்மி மோகன்

மனத்துக்கும் எண்ணங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? மூளையில் எந்தப் பகுதியில் நினைவுகள் பதிவாகின்றன?

மறதி நோய் ஏன் ஏற்படுகிறது? மறதி நோய்தான் என்பதைக் கண்டுபிடிப்பது எப்படி?

மறந்துபோன நினைவுகளை மீண்டும் ஞாபகத்துக்குக் கொண்டு வர முடியுமா?

ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன?

மறதி நோயால் பாதிக்கப்பட்டவரைக் கவனித்துக் கொள்பவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்னென்ன?

நினைவாற்றல் குறித்து நம் மனத்தில் ஏற்படும் இதுபோன்ற எத்தனையோ கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்தப் புத்தகம். மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அசாதாரணமான செய்கைகளுக்குக் காரணம், அந்த நோய்தானே தவிர, நோயாளி அல்ல என்பதைத் தெளிவுபடுத்துவதுடன், அந்த நோயாளிகளைக் கவனிக்கும் பொறுப்பில் இருப்பவர்களுக்கான ஒரு கையேடாகவும் இருக்கிறது இந்தப் புத்தகம்.

நூலாசிரியர் டாக்டர் ஏ.வி. ஸ்ரீனிவாசன், 1974-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் பட்டமும், பிறகு முனைவர் பட்டமும் பெற்று அதே கல்லூரியில் தற்போது பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1993ல், லண்டனில் அங்க அசைவுக் கோளாறுகள் தொடர்பாக ஆய்வு செய்ய காமன்வெல்த் மெடிக்கல் ஃபெலோஷிப் வழங்கப்பட்ட, தமிழகத்தைச் சேர்ந்த ஒரே மருத்துவ நிபுணர் இவர். ஆய்வுக்குப் பிறகு இவர் எழுதிய புத்தகம்தான் ‘பார்க்கின்ஸன்ஸ் பயங்கரம்’. 2003-ல், ஸ்பெயினில் நடைபெற்ற அல்ஸைமர் நோய் குறித்த கருத்தரங்கில் இந்தியப் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு பேசியுள்ளார்.