book

வெண்புள்ளிகள்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர்.கே. உமாபதி
பதிப்பகம் :நலம் பதிப்பகம்
Publisher :Nalam Pathippagam
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
ISBN :9788184935813
குறிச்சொற்கள் :தகவல்கள், மருத்துவ முறைகள், நோய்கள்
Add to Cart

வெண்புள்ளிகள் என்றால் தோலில் ஏற்படும் நிறம் இழப்பு. அவ்வளவுதான் என்று சாதாரணமாகச் சொன்னாலும், அதன் பாதிப்பு எத்தகையது என்பதை, வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டால்தான் தெரியும். குடும்பத்திலும், சுற்று வட்டாரத் தொடர்புகளிலும் எத்தகைய கேலிப் பேச்சு, ஏளனப் பார்வை, குத்தலான வார்த்தை போன்றவற்றுக்கு ஆளாக நேரிடுகிறது. அந்த வகையில், வெண்புள்ளிகள் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது? வெண்புள்ளிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? வெண் புள்ளிகள் குடும்பம் எதற்காக உருவாக்கப்பட்டது? வெண்புள்ளிகள் விழிப்புணர்வு இயக்கத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்னென்ன? என்பதையெல்லாம் விளக்கும் இந்தப் புத்தகம், வெண்புள்ளிககளால் பாதிக்கப்பட்ட வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் பிரச்னைகளை அப்படிப்பட்ட சிலர் மூலமே விளக்கியிருப்பது பாராட்டுக்குரியது. அதேபோல், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோரின் கருத்துகளும் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

இந்தக் கருத்துகளும், இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டு உள்ள அறிவியல்பூர்வமான தகவல்களும், உண்மைகளும், வெண்புள்ளிகளால் பாதிக்கப்பட்டவர்களை, அவர்களுடைய குடும்பத்தினரை, உறவினர்களை, நண்பர்களை ‘பாதிப்பில்’ இருந்து மீட்டு வெளிக்கொண்டு வர நிச்சயம் உதவும்.