book

குழந்தைகள் நிறைந்த வீடு

₹90₹100 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நா. முத்துக்குமார்
பதிப்பகம் :டிஸ்கவரி புக் பேலஸ்
Publisher :Discovery Book Palace
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :78
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789389857351
Out of Stock
Add to Alert List

இந்தக் கவிதை புரியவில்லை. ஆனால் அந்தக் கவிதையைப் பற்றியக் குறிப்பு ஒன்றை கவிஞரின் முன்னுரையில் கண்டபோது அந்தக் கவிதை எழுதப்பட்ட சூழல் மனதில் எழுந்தது, அப்போது தான் அந்தக் கவிதை (யின் அழுத்தம்) புரிந்தது. கவிஞரின் குறிப்பு இது தான். ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் வழியாக ஒரு காட்சி தெரிகிறது. தூரத்தில் பனியில் மூழ்கும் ஒரு மரமும்;மரத்தின் கிளைகளில் ஒரு காக்கையும். வெள்ளைப் பனியின் பின்னணியில் கருப்பு நிறக் காக்கை.ரயில் அம்மரத்தை நெருங்க நெருங்க காக்கையும் பனியும் தொலைந்து மரம் மட்டும் நிராதரவான வெறுமையைச் சுமந்து நிற்கிறது. கவிதை விரிகிறது. இப்போது கவிதையை திரும்ப வாசித்தால் ஒரு ஹைக்கூக் காட்சி கிடைக்கிறது. இதே போல சில கவிதைகள் தனி உணர்வுகளைப் பாடுகின்றன.ஆனால் பெரும்பாலான கவிதைகள் பொது உணர்வுகளையே புது வடிவில் சொல்லியிருப்பது இதமாய் இருக்கிறது.