மாண்புமிகு மருத்துவர்கள்
₹185+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முகில்
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
Publisher :Vikatan Prasuram
புத்தக வகை :சுய முன்னேற்றம்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388104395
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cartஒரு மனிதன் தன் உயிரைக் காப்பாற்றும் மருத்துவரை கடவுளாகப் பார்க்கிறான். உயிர் காக்கும் உன்னதப் பணி, வணிக நோக்கமாகிவிட்ட இன்றைய மருத்துவ உலகில் சேவை மனப்பான்மை கொண்ட மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நோய்களைக் கண்டறியும் முனைப்புடன்; நோய்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் அறிவுடன்; நோயை மேலும் வளர்க்காத அல்லது பக்க விளைவுகளைத் தராத மருந்துகளைப் பரிந்துரைக்கும் திறனுடன், தன்னை நாடி வரும் நோயாளிகளின் நிலை அறிந்து அவர்களுக்கான மருத்துவத்தை இலவசமாக அளித்து அவர்களை இன்முகத்துடன் அனுப்பும் மருத்துவர்களும் நோயாளிகளைத் தேடிச் சென்று சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள். மருத்துவத்தின் நோக்கம் என்ன என்பதை முழுவதும் உணர்ந்து, தொண்டுள்ளத்துடன் ஏழைகளின் பிணி நீக்கும் பணியை தொண்டெனச் செய்துகொண்டிருக்கும் மருத்துவர்களைப் பற்றி, டாக்டர் விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. நோயுற்ற மக்களின் நலனுக்காக சேவை மனதுடன் மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மாண்பை அறிவோம் வாருங்கள்!