book

மகாபாரதம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஏ.எஸ். வழித்துணை ராமன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீக நாவல்
பக்கங்கள் :385
பதிப்பு :3
Published on :2018
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

மகாபாரதம் இந்திய நாடு உலகத்திற்கு அளித்த ஒப்பற்ற காப்பியம் ஆகும். உலக இலக்கியங்களில் தலை சிறந்தது மகாபாரதத்தில் மனித உணர்வுகள் படமெடுத்து காட்டப்பட்ட அளவுக்கு வேறு எந்த இலக்கியத்திலும் காட்டப்படவில்லை என்று மறுப்பின்றி தெரிவிக்கலாம். அன்று வாழ்ந்த இந்தி மக்களின் அறம், பண்பாடு, நாகரிகம், இறை உணர்வு, சமுதா . நெறி, போன்றவைகளை இப்பெருங்காப்பியம் நமக்கெல்லாம் வியக்கத்தகும் வகையில் அளித்துள்ளது. உலகமெனும் பரந்த மேடையில் மனித குலத்தின் எண்ணற்ற பாத்திரங்கள் பிறந்தும், இருந்தும் பெற்ற அனுபவங்களை எல்லாம் மகாபாரதம் நமக்கு பிழிந்து வடித்துத் தந்துள்ளது என்பது மட்டுமல்ல; அறமின்றி, அன்பின்றி வாழும் பொழுது சமுதாயம் சீர்கேடு அடையும் உண்மையையும் மகாபாரதத்தில் பார்க்கலாம்.
மகாபாரத நிகழ்ச்சிகள், மனித இயல்புடன் ஒன்றிப்போய் இருக்கின்ற நிலையில், மனிதன் மறையும் வரை மனித உள்ளத்தில் மீண்டும் மீண்டும் வெளிப்பட்டு நிற்பவை. மனிதனின் உள்ளத்தில் மகாபாரதம் இன்றும், என்றும் தொடர்ந்து நன்மை பெறும் என்றால் அது மிகையாகாது. குருக்ஷேத்திரப் போர் மனிதனின் புறத்திலும், அகத்திலும் தொடர்ந்து நிகழ்ந்து, கொண்டே இருக்கும்.
வியாசர் ஒரு ஒப்பற்ற உலக மேதை. அவருடைய ஆழ்ந்த அகக்கண் மக்களின் வரலாறு தொடங்கி, முடியும் வரையில் ஏற்பட்டும், ஏற்பட இருக்கவும் உள்ள அனுபவங்களை தன்னுள் கண்டு முழுமையாக எடுத்து விளக்கிவிட்டது. மகாபாரதத்தை வரைந்தது மட்டுமின்றி, மற்ற புராணங்களையும் வியாசர் தொகுத்து அருளிச் செய்தார் என்பதை நோக்கின் அவருடைய சாதனையின் பெருமையை, மேன்மையை சொற்களில் அடக்குவதற்கரிது.