book

ஆடு மாடு மேய்ப்பதில் தொடங்கி அண்ணா பல்கலை தாண்டி வா.செ. குழந்தைசாமி வாழ்க்கை வரலாறு

₹349+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராணிமைந்தன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :614
பதிப்பு :1
Published on :2013
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

நானறிந்த அளவில் மற்ற கவிஞர்கட்கு இல்லாத வாய்ப்புகள் நிறைந்த பின்னணிச் சிறப்பு அவருக்கு அமைந்திருக்கிறது. அறிவியல், தொழில்நுட்பத் துறைக் கல்வி, நீர்வளத் துறையில் அத்துறை சார்ந்த உலக அறிஞர்கள் ஒப்பும் தரம் வாய்ந்த ஆய்வு, ஆங்கிலம், தமிழ் இரண்டையும் எழுத்திலும், பேச்சிலும் கையாளுவதில் பிரமிக்கத்தக்க ஆற்றல், ஆங்கிலத்தின் வழி அறிவுத் துறைகள் பலவற்றிலும் தற்கால முன்னேற்றம் வரையான பரிச்சயம், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனம் முதல் இந்தியத் துணைக்கண்டத்திற்கு உள்ளும் வெளியேயும் பல உயர்பதவிகள் வகித்த அனுபவம், இவற்றுடன் கலைமகளின் அருள் பெற்றது போன்ற கவித்துவம் இவை அனைத்தும் ஒருவரிடம் சங்கமமாகி இருப்பதும், இர் அபூர்வ வரமேயாகும். இத்தகைய பின்னணி கொண்ட இன்னொரு கவிஞரை எண்ணிப் பார்க்கிறேன். இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்தவரை, எனக்கு நன்கு பரிச்சயமுள்ள ஆங்கிலம், வங்கம், இந்தி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் இன்னொருவர் என் கண்ணுக்குப்படவில்லை. இத்தகைய அசாதாரண சங்கமம் இன்னொரு மொழியில் இருக்கக்கூடும் எனவும் நான் கருதவில்லை .