book

சகுனம் பார்ப்பது எப்படி?

₹12+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டாக்டர் முருகு இராசேந்திரன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :ஜோதிடம்
பக்கங்கள் :80
பதிப்பு :2
Published on :1996
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

ஜோதிட சக்கரவர்த்தி டாக்டர் முருகு  இராசேந்திரன் அவர்கள் எழுதியது. ஜோதிடர் மற்றும் ஜோதிட மாணவர்களுக்கான நூல்.  பலன்கள் குறித்த  அடிப்படை மற்றும் பற்பல ஜோதிட நுணுக்கங்களை கற்றுக் கொள்ளுங்கள்.
 
ஆசிரியர் குறிப்பு: ஜோதிட சக்கரவர்த்தி என்று உலக மக்களால் போற்றப்படுகின்ற திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் கடலூர் வட்டம் வடலூர் அருகிலுள்ள தம்பி பேட்டை என்ற ஊரில் பிறந்தார். இயற்கையிலேயே வாக்கு பலிதம் கொண்ட இவருக்கு 7ஆம் வகுப்பில் படிக்கும் போதே ஜோதிடம் சொல்லும் ஆற்றல் உண்டாகியது. இவர் விருத்தாச்சலம் கலை கல்லூரியில் பி.யூ.சி. படித்தார். அப்பொழுதும் மேடை பேச்சுக்களில் வல்லவராக திகழ்ந்ததோடு  மாணவர் தலைவராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார். தன் 16 வயதில் பள்ளி இறுதி வகுப்பை படிக்கும் போது ஜோதிடத்தை கணித்து பலன் கூறக் கூடிய அற்புத ஆற்றல் உண்டானது.  சிறந்த முருக பக்தர். 
 
முருகு இராசேந்திரன் அவர்கள் முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பை தொடங்கி கடந்த 30 வருட காலமாக ஜோதிடக் கலைக்கு சேவை புரிந்தார். இவர் தினமும் முருகனை வழிபட்ட பின்னரே ஜோதிட பலனை சொல்ல தொடங்குவார். இவர் ஜாதகம், கைரேகை, எண் ஜோதிடம், வாஸ்து ஆகிய கலைகளின் ­மூலம் எதிர்கால பலன்களை கூறி வந்தார். திரு. முருகு இராசேந்திரன் அவர்கள் பல பத்திரிகைகளுக்கு கடந்த 40 ஆண்டுகளாக ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதி வந்தார். 
 
கோபுர தரிசனம் ,சி÷நிகிதி,  கோகுலம் கதிர், நலம் தரும் ஜோதிடம், வளம் தரும் வாஸ்து, மாலை மலர், பாலஜோதிடம், மலேசிய நண்பர், தமிழ் நிசன, போன்ற பத்திரிகைகளுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை வழங்கி வந்தார். 30 ஆண்டுகளாக முருகு ஜோதிடக் கலை என்ற மாத பத்திரிகையின் ஆசிரியராக இருந்து குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, தினப்பலன், மாதப்பலன், புத்தாண்டுபலன் போன்றவற்றை எழுதியுள்ளார். ஜோதிட ஆராய்ச்சி மையம் என்ற  நிறுவனத்தின் ­மூலம் கடந்த 30 வருடங்களாக ஜோதிடக் கலையை அஞ்சல் வழியிலும் பலருக்கு பயிற்றுவித்து வந்தார். முருகு ஜோதிட ஆராய்ச்சி மையம் நிறுவியதோடு, அனைத்திந்திய ஜோதிடர்கள் சங்கம் எனும் மாபெரும் ஆலமரத்தைத் தோற்றுவிக்க விதையாக செயல்பட்டு.  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் பதவியையும் வகித்து வந்தார்.