book

உயிரே போற்றி உணவே போற்றி

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :போப்பு
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
ISBN :9789387499232
Out of Stock
Add to Alert List

முதலில் வயிறும், செரிமான உறுப்புகளும் கெடுவதன் விளைவாக அடுத்தடுத்து நோய்களாக கிளை பரப்பிச் செல்கிறது. நோய்களை மருந்துகளின் வாயிலாக தீர்க்க முயலுவதை விட அறியாமை வேறெதுவும் கிடையாது.
மனம் பதற்றமடைவதற்கும், நம்முடைய பரபரப்பான வாழ்க்கை முறைக்கும், உள்ள தொடர்பை எந்த நவீன உடலியலும் பேசுவதில்லை. நம்முடைய மண்ணில் உரத்தையும், பூச்சி மருந்துகளையும் கொட்டி உணவை நஞ்சாக்கி வைத்திருக்கிறோம். இது போதாதென்று இப்போது வெளி உணவுகளாலும், பாதுகாக்கப்பட்ட உணவுகளாலும் நமது உடலை மிக வேகமாக நஞ்சாக்கிக் கொண்டுள்ளோம்.
அதற்கும் மேலாக நோய்களினின்று ‘மீள்வதாகக் கற்பிதம் செய்து கொண்டு வேளா வேளைக்கு மருந்து என்ற பெயரில் உடலை மேலும் மேலும் நஞ்சக் களனாக மாற்றி வருவது குறித்தும், அதற்கு மாற்று வழி தேடுவதுமான ஒரு அலசலே உயிரே போற்றி உணவே போற்றி’ எனும் இச்சிறிய நூல்.