book

கீதை காட்டும் ஞானப் பாதை

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.க. மணி
பதிப்பகம் :அபயம் பப்ளிஷர்ஸ்
Publisher :Abhayam Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :141
பதிப்பு :1
Published on :2017
ISBN :9788193195031
Add to Cart

மகாவாக்கியம்- தத்வமஸி, மோட்சம் தருகிறது. யாருக்கு? இதை உள்ளபடி அறிந்தவருக்கு. தத்வமஸி என்றால் ‘நீ அதுவாக இருக்கிறாய்’ என்று பொருள். அது என்பது எது? நீ என்று எதை வேதம் குறிக்கிறது? சாத்திரத்தைக் குருவின் துணையுடன் அறிபவருக்கு மோட்சம் கிடைக்கிறது. அவர் மீண்டும் பிறப்பதில்லை. அவர் கதி என்ன? அவர் எப்போதும் என்னவாக இருந்தாரோ அதுவாகவே இருக்கிறார். எனில் மோட்சம் என்பதென்ன? அறிவது! எதை? நீ யார் என்பதை. நான் யார்? நீ கடவுள், சுத்தமான பேருணர்வு! சத்தியம் ஞானம் அனந்தம் பிரம்மம். விஷயம் சுலபமாகத்தான் இருக்கிறது. ஆனால் அது புத்தியில் வேலை செய்வதில்லை. வழக்கம்போலவே சீடன் உடம்பளவுடையவன் நான், மனம் வழங்கும் சுகம்தான் என்னுடையது, நான் பிரம்மத்தை அடைவதெப்படி என்று குழம்புகிறான். பிரம்மம் பற்றிய அறிவும் தன்னைப் பற்றிய அறிவும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றே. தன்னை அறிந்தவர் பிரம்மத்தை அறிகிறார். அதுவே விடுதலை அல்லது மோட்சம். இந்த அறிவின் பெயர் பிரம்ம ஞானம். பிரம்ம ஞானம் ஏன் கற்றவருக்கும் கை கொடுப்பதில்லை என்றால் அவரிடம் சாதன ஞானம் இல்லை. புத்தி பக்குவப்படாமல் பிரம்மஞானம் சாத்தியமில்லை. புத்தியைப் பக்குவப்படுத்தும் ஞானத்தைப் பற்றி இந்நூல் சொல்கிறது. இது என் கருத்தல்ல. பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு எடுத்துச் சொன்னது. தமிழில் தரும் வேலையை மட்டுமே நான் செய்திருக்கிறேன். நிறைகள் பகவானுக்கு. குறைகள் என்னுடையது.