book

பீர்முகம்மது படைப்புகள்

₹700
எழுத்தாளர் :பீர் முகமது
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :1200
பதிப்பு :1
Published on :2017
Add to Cart

இந்த நூலில் இலக்கியம் சமூகம் சார்ந்து பணியாற்றிய ஆளுமைகள் பற்றியும் சை.பீர் அவர்கள் எழுதியுள்ளார். இவற்றில் முருகு.சுப்பிரமணியன், கோ.சாரங்கபாணி ஆகியோர் குறித்த கட்டுரைகள் 1960-1970 களில் மலேசிய தமிழ் இலக்கியச் சூழலையும் இதழியல் சூழலையும் அறிவதற்கான சாளரமாக விளங்குகிறது.  மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் தோற்றம் காணவும் அதன் அமைப்புத் தலைவராகவும் பணியாற்றியவர் முருகு.சுப்பிரமணியன். அவரைக் குறித்த இந்தக் கட்டுரை முழுமைப் பெறாத மலேசியத் தமிழ் இலக்கிய உலகின் இன்னொரு சிறு பகுதியை நிறைவு செய்யும் வண்ணம் அமைந்திருக்கிறது. தேசிய எழுத்தாளர் சங்கத்துடனான ஒத்துழைப்பு, பவுன் பரிசுத் திட்டம் ஆகிய இலக்கியச் செயற்பாடுகளை முருகு.சுப்பிரமணியன் குறித்த பங்களிப்புகளைக் குறிப்பிடுகிறார். முருகு. சுப்பிரமணியன் குறித்த கட்டுரை என்பதும் சை.பீரின் நினைவு வளையங்களிலிருந்தே எழுவதால் அவரின் பங்களிப்பும் அதனூடாகவே வருகிறது. சை.பீரும் எழுத்தாளர் சங்கத்தின் உருவாக்கத்திலும் செயலவையிலும் ஆற்றியுள்ள பங்களிப்பைக் குறிப்பிடுகிறார். அதன் அமைப்புக்குழுவில் துணைச் செயலாளராக இருந்தவர் பின்னாளில் துணைத் தலைவராகவும் பணியாற்றியதையும் குறிப்பிடுகிறார். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தொடக்கக் காலக்கட்டத்தில் நாடு முழுதும்  சிறுகதை கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து படைப்புகள் குறித்த உரையாடலை உருவாக்க முனைந்திருக்கிறார். இருப்பினும், அவ்வுரையாடல் குறித்து எழுந்த சர்ச்சைகளால் அம்முயற்சி கைவிடப்பட்டதையும் அறியமுடிகிறது.