குமரகுருபர அடிகள் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கா. சுப்ரமணிய பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :106
பதிப்பு :1
Published on :2017
Add to Cartதிருச்செந்தூரண்ணல் பேரருளினாலே அருமைப் புதல்வர்க்கு நல்லறிவு
விளங்கிற்று. அவர் சண்முக விலாசமென்னு முன்மண்டபத்திலே தங்கியிருந்தனர்.
ஆறுமுகச் செவ்வேள் அருட்டிருவடிவம் அவருள்ளக் கண்ணிற்குப் புலனாயிற்று.
அவ்வடிவத்தையே நினைந்து தொழுதிருக்கு நாளிலே, ஒருநாள் குமரவேள் அடிகட்குத்
தோன்றி “நீ யார்” என்று வினாவியருளியவுடன், அவர் வாய்திறந்து "அடியேன்”
என்றார். இறைவன் அவர்க்குச் சைவசித்தாந்த உணர்ச்சி நல்கிக் குருபரன் என்ற
திருப்பெயருமிட்டு மறைந்தருளினார். அடிகள் தமக்குப் பரஞானம், தமது
வாக்கிற்குத் தடைஏற்படுமிடத்தேகிட்டுமென்று அறிவுவுறுக்கப்பெற்றார்.
அன்று முதல் அடிகள் தூய தவவேடத்துடன் துறவு வாழ்க்கை நடத்துவாராயினர். திருச்செந்தூர்ப் பிரான்மீது கந்தர் கலி வெண்பா வென்ற அழகிய பொருள்வளமிக்க பாமாலை தொடுத்தனர். அடிகள் தம் பெற்றோரும் பிறரும் அவரைக் குமரகுருபரனென்றழைக்கலாயினர்.