நிழலின் வாக்குமூலம்
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன். வாசுதேவன்
பதிப்பகம் :அகநாழிகை பதிப்பகம்
Publisher :Aganazhigai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2016
ISBN :9789384921156
Add to Cartபொருளொன்றின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் போது எதிர்த்திசையில் நிழல் விழுகிறது. நிழல் ஒருபோதும் நிஜம் ஆகிவிடாது. இருந்தும் நிஜத்தின் சாயலை நிழல் தாங்குகிறது. அந்த உரிமையில் அவை தன் எஜமானனின் அழுக்குகளை, வன்மங்களை, கசப்புகளை, அபத்தங்களை வார்த்தைகளாக்கினால் அவை பொன். வாசுதேவனின் கவிதைகளுக்கு நிகரானதாக மாறக்கூடும். பொன். வாசுதேவனின் ‘நிழலின் வாக்குமூலம்’ மற்றும் ‘உன்மத்தப் பித்தன்’ கவிதை தொகுப்புகள் இப்படியான கவிதைகளை தன்னுள்ளே வைத்திருக்கிறது. மனிதன் தன்னையே கண்ணாடியில் பார்க்கிறான். கண்ணாடியோ மனிதனை மட்டும் காட்டாமல் விமர்சனம் செய்வதற்குத் தோதாக அவனின் அழுக்குகளை அவனுக்குக் காட்டுகிறது. கடக்க வேண்டிய கசப்புகளையும் பாதுகாக்க வேண்டிய பண்புகளையும் சுய விமர்சனத்தின் மூலமே அறிந்து கொள்கிறான். நிழலின் உரிமையும் கண்ணாடியின் விமர்சனமுமாக விரிகிறது பொன். வாசுதேவனின் கவிதைகள். சுருங்கச் சொல்ல வேண்டுமெனில் நிரூபிக்கவியலாத மனிதக் கணங்களை வார்த்தைகளாக்குகின்றன இக்கவிஞரின் வரிகள்.