
மண் மணம்
₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. மணிகண்டன்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :பயணக் கட்டுரை
பக்கங்கள் :128
பதிப்பு :1
Published on :2016
Out of StockAdd to Alert List
அறிவியல் அசுர வளர்ச்சியின் காரணமாக, நவீன தொழில் நுட்பம் உச்சத்துக்கு
சென்று விட்டது. சினிமா துறைக்கு அடித்தளமாக இருந்த நாட்டியம், நாடகம்
உள்ளிட்ட கலைகள் அனைத்தும், இடம் தெரியாமல் மறைந்து வருகின்றன. நவீன கால
வளர்ச்சி, கலாச்சார மாற்றம் உள்ளிட்டவற்றால் பண்டைய கலைகள் அனைத்தும்
ஒன்வொன்றாக கலை இழந்தன. எங்கோ ஒரு சில கிராமங்களில் கலைஞர்கள் சிலரால்,
அக்கலைகள் புத்துயிர் பெற்று வருகின்றன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம்
பல்லடம் அருகே உள்ள, கிராமிய கலைக்குழு இன்றும் கலையை வளர்த்து வருவது
பெருமை பட வைக்கின்றது.பல்லடம் ஒன்றியம் கரடிவாவி ஊராட்சிக்கு உட்பட்ட
ஆறாக்குளம் சிற்றூராட்சி. விவசாயமே பிரதானமாக உள்ள இக்கிராமத்தில், கிராமிய
கலைக்கும் ஒரு வரலாறு உள்ளது என்பது அதிசயப்பட வைக்கிறது. அழிந்து வரும்
கலையை, கிராமத்து குழுவினர் புதுப்பித்து போற்றி வருகின்றனர்.குழுவினை
சேர்ந்த கலைஞர்கள் கூறுகையில்: 40 வருடங்களுக்கு முன் இங்கு வாழ்ந்து வந்த
கருப்புசாமி வாத்தியார் என்பவரே இக்குழுவுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர்.
கிராமிய கலை இங்கு பழக்கத்துக்கு வர, இவரே பிரதானமாக இருந்தார்
