book

மகிழ்ச்சியின் மந்திரம்

₹225+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சபீதா ஜோசப்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :உளவியல்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

ஏன், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்? காரணம், மகிழ்ச்சியே ஆரோக்கியம் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
இதோ, இங்கே புள்ளிவிவரங்களாகப் பார்ப்போம்...எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு, எடை அதிகரிப்பு, ‘டைப் 2’ நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றுக்குக் காரணமான மன அழுத்த ஹார்மோன் ‘கார்ட்டிசோல்’ குறைவாகச் சுரக் கிறது.மகிழ்ச்சியின் விளைவாக ‘டோபாமைன்’ ஹார்மோன் சுரப்பினால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகிறது, ‘இன்சோம்னியா’ போன்ற தூக்கப் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.மகிழ்ச்சியாக இருப்பவர்களுடன் ஒப்பிடும்போது, மகிழ்ச்சியைத் தொலைத்தவர்களுக்கு ஜலதோஷம், நுரையீரல் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பு 300 சதவீதம் அதிகம்.மகிழ்ச்சியுடன் உறவாடுவோருக்கு சுயஒழுங்கு அதிகமாம். அதனால் அவர்கள் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைப் பெற்றிருக்கிறார்கள்.
மகிழ்ச்சியான மனிதர்கள், சுமார் 47 சதவீதம் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்று கிறார்கள் என்று, இங்கிலாந்து மருத்துவ இதழ் ஒன்று கடந்த ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்திருக்கிறது.
மகிழ்ச்சியான மனநிலை கொண்டவர்கள், எலும்புகளை வலுப்படுத்தும், சக்தியை அதிகரிக்கும் ஆரோக்கியமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் வாய்ப்பு, 30 சதவீதம் அதிகமாக உள்ளது.தாங்கள் மகிழ்ச்சியானவர்கள் என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இதயத் துடிப்பு சீராக இருக் கிறது.மகிழ்ச்சியான நபர்களுக்கு ரத்த பிளாஸ்மா அடர்த்தி குறைவாக இருக்கிறது, எனவே இதயநோய் அபாயமும் குறைகிறது.சந்தோஷமாக, எப்போதும் நேர்மறை எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு, சோககீதம் வாசிப்பவர்களை விட இதயநோய் வாய்ப்பு குறைவு.