book

தடைக்கல்லே படிக்கல்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. பழனி
பதிப்பகம் :கிழக்கு பதிப்பகம்
Publisher :Kizhakku Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789384149444
Add to Cart

இந்நூலாசிரியர் பேரா. ந.பழனி சிறுவயதிலேயே தொழுநோயால் பாதிக்கப்-பட்டு, அந்நோயின் கஷ்டநஷ்டங்களை உணர்ந்தவர். அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டெழுந்தவரும்கூட. ஆனால் அத்துடன் நின்றுவிடாமல் தன் வாழ்நாள் முழுவதையும் தொழு-நோயாளிகளுக்குச் சேவையாற்ற அர்ப்பணித்துக் கொண்டவர் என்பதுதான் முக்கியம்.

இயன்முறை மருத்துவம் பயின்ற ந.பழனி, உலகப் புகழ் பெற்ற தொழுநோய் மருத்துவரான டாக்டர். பால் பிராண்டுடன் இணைந்து பல புதிய சிகிச்சை முறைகளைக் கண்டறிந்தார். அவற்றைத் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பரீட்சித்துப் பார்த்து வெற்றியும் கண்டார். இந்த அனுபவங்களை அவர் படிப்படியாக விவரிக்கும்போது மனம் நெகிழ்ந்துபோகிறது.

வினோபாபாவே, பாபா ஆம்டே போன்ற தியாகசீலர்களுடன் இணைந்து பணியாற்றியவர் ந.பழனி. இந்தப் புத்தகத்தில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு தகவல்களைத் தருவதோடு அதற்கான சிசிக்சை முறைகளையும் பிசியோதெரபி பயிற்சிகளையும் விவரித்திருக்கிறார்.

சின்னச் சின்ன துன்பங்களுக்கே துவண்டு போகிறவர்கள் இந்தப் புத்தகத்தைப் படித்தால் மலையளவு நம்பிக்கையையும் மகத்தான சக்தியையும் பெறுவார்கள். தடைக்கல் என்பது அஞ்சி நடுங்கவேண்டி ஒன்றல்ல, தாண்டிக் குதித்து வெற்றி பெறுவதற்கானது என்பதைத் தன் வாழ்வின் மூலம் அற்புதமாக உணர்த்தியிருக்கிறார் நூலாசிரியர்.