book

நிழல் படம் நிஜப் படம்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :யுகன்
பதிப்பகம் :நற்றிணை பதிப்பகம்
Publisher :Natrinai Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :345
பதிப்பு :1
Published on :2017
ISBN :8782582648925
Add to Cart

போர், அரசியல், இனப் பகைகள் பற்றிய இந்திய உலக சினிமாக்களின் அறிமுக மற்றும் விமர்சனத் தொகுப்பு இந்த நல்ல நூல். மொத்தம் 27 சினிமாக்கள் பற்றிய 27 கட்டுரைகள். ஒரு சினிமா என்ன சொல்கிறது; எப்படிச் சொல்கிறது; அந்த சினிமா யார் பக்கம் நிற்கிறது; அந்த சினிமாவின் முக்கியத்துவம் என்ன ஆகியவை பற்றிய எளிமையான கட்டுரைகள் இவை.

சினிமா பற்றிய காத்திரமான பார்வையும் கருத்தும், மொழியும் உள்ளவர் யுகன். கடந்த இருபது ஆண்டுகளாக உலகத்தின் உன்னதமான சினிமாக்களைத் தேடித் தேடிப் பார்த்து ரசித்து அவற்றில் பலவற்றைத் தமிழில் நூல் வடிவத்தில் தந்தவர். நம் தமிழ்ச் சூழலில் அந்த உலக சினிமாக்கள் போல ஒன்றேனும் வந்துவிடாதா என்று தொடர்ந்து ஆசைப்பட்டுக்கொண்டு இருப்பவர். அதற்காக அச்சு ஊடகத்திலும் உழைத்துக்கொண்டிருக்கிறார்.

இந்தப் புத்தகத்தைத் தோய்ந்து படித்த வாசகர், கண்டிப்பாக நல்ல சினிமா பற்றிய உணர்வைப் பெறுவார், நல்ல உலகசினிமா பக்கம் நகர்வார் என்று நிச்சயமாக நான் நம்புகிறேன். அதுவே இந்த நூலின் நோக்கம்.