இந்திய மண்ணை மணம் வீசச் செய்த இசுலாமிய மாமணிகள்
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஜெகாதா
பதிப்பகம் :நேஷனல் பப்ளிஷர்ஸ்
Publisher :National Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :160
பதிப்பு :2
Published on :2021
ISBN :9788193644515
Add to Cartஉதிக்கும் சூரியனுக்கு ஒரு கடமை இருப்பதுபோல, பொழியும் மழை நீருக்கு ஒரு கடமை இருப்பது போல, எரியும் நெருப்புக்கு ஒரு கடமை இருப்பது போல, வீசும் காற்றுக்கு ஒரு கடமை இருப்பதுபோல, தாங்கும் பூமிக்கு ஒரு கடமை இருப்பதுபோல, வாழும் மனிதருக்கு வாழ்க்கையை அடையாளப்படுத்திக் கொள்வதற்கான சிந்திக்கும் கடமை இருக்கிறது. அதன் பொருட்டே இப்பூவுலகில் மனிதர்கள் ஏதேனும் ஒரு துறையில் தீவிர பற்றுக் கொள்ள முயல்கிறார்கள்.
ஒன்றில் பற்றுக்கொள்ள யாவற்றையும் துறப்பதன் ரகசியமாக வெற்றியின் சிகரங்கள் அவர்களுக்கு எட்டி இருக்கிறது என்பதே உண்மை.
கர்ம சிரத்தையோடு தன் வாசம் உணர்த்த முற்பட்ட இஸ்லாமிய மாமணிகள் பலர் பல் துறையிலும் பவனி வருகின்றனர்.
மானுட வாழ்விற்கு உய்யும் வழி உணர்த்தும் உயரிய கலங்கரை விளக்காக இஸ்லாமிய மாமணிகள் பலர் இம்மண்ணை மாண்புறச் செய்திருக்கின்றனர். இலக்கியம்,கலை, அறிவியல், வரலாறு, அரசியல், ஆன்மிகம், தேசிய விடுதலை என மானுட நந்தவனத்தின் பல்துறை வாசம் மணக்க இந்திய மண் எங்கும் இஸ்லாமிய மாமணிகள் பங்களிப்பு செய்துள்ளார்கள்.