நாமக்கல் கவிஞர் பாடல்கள்
₹175.5₹195 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :295
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123426907
Out of StockAdd to Alert List
இராமலிங்கனார் சேலம் மாவட்டம், மோகனூரில் அம்மணிம்மாள், வெங்கடராமன் ஆகியோருக்கு பிறந்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட காங்கிரஸின் செயலாளராகவும், கரூர் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும், நாமக்கல் வட்டாரக் காங்கிரஸ் தலைவராகவும் பணியாற்றியவர். தேசபக்திமிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரக்ப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர். ‘அரசவைக் கவிஞர்’ பட்டமும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.