book

இந்தியப் புரட்சி - இன்றைய பரிமாணங்கள்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :து. ராஜா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788194492177
Add to Cart

இந்தியப் புரட்சி என்பது பொருளாதாரப் புரட்சி மட்டுமன்று.அது முதலாளி தொழிலாளி பிரச்சனை மட்டுமல்ல,முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையில் நடைபெறுகிற போராட்டம் மட்டும் புரட்சி அல்ல.சமூக நீதிக்கானப் போராட்டத்தில்,சமூக ஒடுக்குமுறைக்கான போராட்டத்தில்,ஆணாதிக்கத்துக்கு எதிரான பெண் விடுதலைப் போராட்டங்களில் வெற்றி பெறும்போது மட்டுமே இந்தியப் புரட்சி வெற்றி பெற்றதாக கருதப்படும் "பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிபெறும் போது, ஜாதிமத வித்தியாமில்லாமல் ஆண் பெண் அசமத்துவம் இல்லாமல் நாமெல்லாம் மனிதர்கள் என்று மானுடம் வெற்றி பெரும் போது மட்டுமே இந்தியாவில் புரட்சி வெற்றி பெரும் என்று நான் வலுவாக கருதுகிறேன் " "அப்படிப்பட்ட உயர்ந்த நோக்கத்தை மனதில் கொண்டு நாம் செயல்படவேண்டும்" நாம் ஒன்றுபட்டுச் செயல்படவேண்டும்,மக்களிடம் செயல்படவேண்டும்,ஏனென்றால் மக்கள் இல்லாமல் எதையும் சாதிக்க இயலாது மக்கள் தான் சரித்திரத்தை உருவாக்குகிறார்கள் மக்கள் தான் சரித்திரத்தை மாற்றுகிறார்கள் நாம் மக்களுக்காகவேண்டித்தான் போராடிக்கொண்டிருக்கிறோம் இதற்குப் பொருள் மக்களை வணக்கிக்கொண்டு பின்னே நிற்க வேண்டும் என்பது அல்ல,மக்களுக்கு வழிகாட்டுகிற அதே நேரத்தில் மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் மக்களிடம் எப்படி செயல்படவேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இப்படிப்பட்ட அணுகுமுறையோடு நாம் செயல்பட்டால் இந்தியாவுக்குத் தேவையான ஒரு மாற்றை முன்வைப்பதற்கு நமக்குச் சாத்தியப்படும், நாம் வெற்றிபெற முடியும் என நான் திடமாக நம்புகிறேன்