book

மகாபாரதக் கதைகள்

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சத்யா ஸ்ரீனிவாசன்
பதிப்பகம் :கண்ணப்பன் பதிப்பகம்
Publisher :Kannappan Pathippagam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :5
Published on :2012
Out of Stock
Add to Alert List

துரியோதனன் தாய் காந்தாரி. அவள் காந்தார நாட்டு மன்னன் மகள். அவள் சகோதரன் சகுனி. சகுனியை அறியாதவர் ஒருவரும் இரார். பாண்டவர்களைச் சூதால் வென்று காட்டுக்கு அனுப்பிய அந்தக் கயவனை அறியாமல் இருக்க இயலுமா! துரியோதனன் உடன் பிறந்தவர் நூறுபேர். ஆதலால் அவர்கள் ஈரைம்பதின்பர் என்றும் நூற்றுவர் என்றும் பெயர் பெற்றனர்.
இதைப் போலவே சகுனியின் உடன்பிறந்தவரும் நூற்றுவரே.
துரியோதனனுக்குத் தாய் மாமன்மாராகிய நூற்றுவரும் ஏதோ காரணத்தினால், அத்தினபுரத்திலேயே தங்கியிருந்தனர்.அரண்மனையில் எந்நேரமும் சகுளி சகோதரர்கள் இங்கும் அங்கும் போய் வந்து கொண்டே இருப்பர்.தாய்மாமன் முதலிய பெரியோர் யாராயிருப்பினும் மரியாதை செய்ய வேண்டிய வழக்கம் அந்நாளில் இருந்தது.