அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி உரை
₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கி.வா.ஜ
பதிப்பகம் :அல்லயன்ஸ்
Publisher :Alliance Publications
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :124
பதிப்பு :12
Published on :2013
Out of StockAdd to Alert List
அபிராமி அந்தாதி, மிக அற்புதமான நூல். இலக்கிய நயமும் தமிழ் அழகும் செறிந்த ஓர் காவியம். ."தாரமர் கொன்றையும் ஷண்பக மாலையும் சார்த்தும் தில்லைஊரர் தம் பாகத்து உமை மைந்தனே! உலகேழும் பெற்றசீர் அபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளேகாரமர் மேனி கணபதியே நிற்கக் கட்டுரையே"அபிராமி அந்தாதி பாடத் தொடங்குமுன் அபிராமி பட்டர் விக்னேஸ்வரனை வணங்கி விட்டுத்தான் ஆரம்பிக்கிறார். எந்தக் கார்யம் ஆரம்பிக்கிற போதும் விநாயகனை வணங்கி விட்டு தானே தொடங்குகிறோம்? பிள்ளையார் சுழி போட்டு விட்டு தானே தொடங்குகிறோம்? அதே போல, அபிராமி அன்னையைப் பற்றி அந்தாதி பட ஆரம்பிக்கிற போதும் அப்படியே செய்கிறார் பட்டர்.
பெரிய பெரியவா, பிள்ளையாரைப் பற்றிச் சொல்லும்போது, ஒரு இடத்தில் (தெய்வத்தின் குரல் - நான்காம் பாகம்) அவருக்கே உரிய நகைச்சுவையோடும் அழகோடும், சொல்லுகிறார்: