மதிக்கத்தக்க மரபுகள்
₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாலஐஸ்வர்யா
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :115
பதிப்பு :2
Published on :2014
Add to Cartதமிழர் வரலாறு வரும் தொடர்களில், வணிகர் குலத்தைக் குறிக்கும் போதெல்லாம், "வணிகர்" என, அவர் குலப் பெயரிட்டுக் குறிப்பிடாமல், அரசகுலத்தவர்க்கு அடுத்து வைத்து மதிக்கத்தக்க இனத்தவர் என்ற அவர் குலப்பெருமை தோன்றக் குறிப்பிடுவதையே இளங்கோவடிகளார் மரபாகக் கொண்டு உள்ளார் என்பது தெளிவு. ஆகவே, "அரைசு விழை திருவின் பரதர்" என்ற தொடரில் வரும் "அரைசு" என்ற சொல்லோ, "அரைசர் பின்னோர்" என்ற தொடரில் வரும் "அரைசர்" என்ற சொல்லோ, பொதுவாக, அரசர் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ள சொல்லேயன்றிக் குறிப்பிட்ட அரசன் ஒருவனைச் சுட்டிக் கூறப்பட்ட சொல் அன்று