book

குடும்ப விளக்கு (5 தொகுதிகள் முழுவதும்)

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பாரதிதாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :192
பதிப்பு :6
Add to Cart

அன்பு மணவாளன்
ஆன வுணவருந்திப்
பின்பு, மனைவிதந்த
பேச்சருந்தித்-தன்புதுச்

சட்டை யுடுத்துத்
தனிமூ விரற்கடையில்
பட்டை மடித்த
படியணிந்து-வட்டநிலைக்

கண்ணாடி பார்த்துக்
கலைந்த முடியதுக்கிக்
"கண்ணேசெல் கின்றேன்
கடைக்"கென்றான்-பெண்வாய்க்

கடைவிரித்துப் புன்னகைப்புக்
காட்டி "நன்" றென்றாள்;
குடைவிரித்துத் தோள்சாய்த்துக்
கொண்டே-நடை விரித்தான்.