book

தராசு

₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சு. சமுத்திரம்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :176
பதிப்பு :1
Add to Cart

ஒத்துபோக முடியாது என்ற மனோதத் துவத்தை படித்தறிந்து எழுதிய கதை. ஒரு காதல் கடிதம் - உண்மையிலேயே நடந்தது. அந்த கடிதத்தை படித்துவிட்டு, அந்த இளைஞன் துடித்த துடிப்பும், பதறிய பதற்றமும் என் கண்களை சில சமயம் குத்துகின்றன. உண்மையான காதலர்களுக்கு இந்தக் கதையின் தாக்கம் புரியும். ஒரே பகலுக்குள் - எனது அலுவலக தலைவர் ஒருவர் நடந்து கொண்ட விதத்தை வைத்து எழுதப்பட்ட கதை. இதில் வரும் வாழைப்பழவாங்கல் உண்மையிலயே நடந்தது.ஆனாலும், அவரது அடாவடிதனத்திற்குத் தண்டனை கிடைக்கவில்லை. நான்தான் மென்மையாக கொடுத்திருக்கிறேன். ஆனாலும், இப்படிப் பட்டவர்களுக்கு இத்தகைய கர்வ பங்கங்கள் ஏற்படுவதுண்டு. சண்டைக் குமிழிகள்.பாணி சண்டைகள், இன்று பெரும்பாலும் கிராமங்களில் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனாலும் அருகி வருகின்றன. இந்தக் கதையை மண் வாசனைக்காக மட்டும் எழுதவில்லை. அடித்தள மக்கள் எந்த வேகத்தில் சண்டை போடுகிறார்களோ, அந்த வேகத்தில் அதை மறந்து விடுகிறார்கள். இந்தச் சண்டைகள் இவர்களுக்கு, தத்தம் மனோபாரங்களை இறக்கி வைக்கும் கமைதாங்கிகளாகவே உள்ளன