book

பாரதப் பண்டிகைகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாந்தா மூர்த்தி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :159
பதிப்பு :1
Add to Cart

பாரத நாடு பண்டிகைகள் நிறைந்த நாடு. ஏழாயிரம் ஆண்டுகளாக வளர்ந்த கலாச்சாரம் இது. வெளிநாட்டவர்களுக்கு கிருஸ்த்மஸ், தூய வெள்ளி என்று ஒரு சில பண்டிகைகள் மட்டுமே உண்டு.
நமது பண்டிகைகளின் நோக்கமே தனி. அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்கிற நான்கும் புருஷார்த்தங்கள் எனப்படுகின்றன. மனிதர்கள் இந்த நான்கைத்தான் நாடுகிறார்கள். இந்த நான்கில் மிகவும் சிரேஷ்டமானது வீடுபேறு.
வீடுபேறு அல்லது மோட்சமே உயர்ந்த குறிக்கோளாக இருப்பதால், சமுதாயத்தில் உள்ள அனைவரும் அதை மறவாமல் இருக்கும் பொருட்டு ரிஷிகள் வேதம், புராணம், இதிகாசங்களை வகுத்து வைத்திருந்தனர். அந்த வேத, புராண, இதிகாச விஷயங்களை நினைவுபடுத்தும் பொருட்டு பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், தீபாவளி, திருக் கார்த்திகை, வினாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூசை, ஆயுத பூசை, கிருஷ்ண ஜெயந்தி, ராம நவமி, குரு பூர்ணிமா என்று பல பண்டிகைகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
புராண அடிப்படையிலான பண்டிகைகள் சிவராத்திரி, நவராத்திரி போன்றவை. இதிகாச அடிப்படையிலான பண்டிகைகள் ராம நவமி, கிருஷ்ண ஜெயந்தி போன்றவை. ரிஷிகள், ஆச்சார்யகளின் நினைவாக உள்ள பண்டிகைகள் குருபூர்ணிமா, சங்கர ஜெயந்தி முதலானவை.
எந்தப் பண்டிகை எந்த மாதத்தில் எந்த திதியில் அல்லது நட்சத்திரத்தில் கொண்டாடப்பட வேண்டும் என்பது மிக மிகத்தெளிவாகவே வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. பண்டிகைகளின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் கொண்டாடுவது வீண் ஆடம்பரமாக ஆகிவிடும். புரிந்து கொண்டு கொண்டாடினால் அது உண்மையிலேயே ஆத்மானந்தக் கொண்டாட்டமே என்பதில் சந்தேகமில்லை.