
தாகம் (ஆஸ்கார் ஒயில்ட்)
₹15+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அகிலன்
பதிப்பகம் :தமிழ்ப்புத்தகாலயம்
Publisher :Tamil Puthakalayam
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :76
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
ஆஸ்கார் ஒயில்டும் (Oscar Wilde) பெண் உலகத்தை நன்றாய் உணர்ந்தவர்; பெண்மையின் எழிலையும் அதி அற்புதமாக, அவர் கட்டுரையிலும் நாடகத்திலும் நாவலிலும் கவிதையிலும் மிக நுட்பமாக ஆழமாகச் சித்தரித்திருக்கிறார். பிரெஞ்சு, ஆங்கிலம், தமிழ் - மும்மொழிகளிலும், ஒயில்டின் சிந்தனை மின்னல் ஒளி வெள்ளத்தை வாரிக் கொட்டுகிறது.
இளவரசி 'சலோமி'யின் பெண்மையும், அழகும், வேல் விழியும், நடனமும், இரத்த வெறி பிடித்த காதல் வெறியின் வெற்றியும், இறுமாப்போடு கலந்த சபதமும். ஒரு பிடிவாதமான ஞானியின் தலையையே வெட்டி, வெள்ளித்தட்டில் வைத்து முத்தமிடவே துடிதுடிக்கின்றன.
இந்த நாவலைப் படித்து முடித்ததும், உங்கள் உள்ளம் நடனமிடும். காதற் கனவு காணும், அழகு ராணிகளின் அந்தரங்கமான காதற் புயலையே கற்பனை செய்யப் புறப்பட்டு விடுமல்லவா? ஆம் - இதுவே காதல் உலகம், ஆண் - பெண் உலகம்! இந்த நாவல் ஒரு காதல் நறுமலர்.
