ஆடும் மாடும் (நெடுங்கதை)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :டி.கே. சீனிவாசன்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கதைகள்
பக்கங்கள் :156
பதிப்பு :1
Published on :2010
Out of StockAdd to Alert List
கதைக்கான காரணம் “எங்கே இருந்தப்பா தேடிப்பிடித்தாய் இந்த அற்புதமான தலைப்பை?” என்று கேட்கத்தோன்றும் பலருக்கு - இதைப் படித்தவுடன், அவர்களுக்குத் தெரியாது 'நான் இதைத் தேடிப் பிடிக்கவில்லை. அதுதான் என்னை நாடி ஓடிவந்தது' என்ற உண்மை .
தொடர்கதை ஒன்றுக்காக நீண்ட நாட்களாக என்னைத் தொல்லைப்படுத்தி வந்த பொன்னி, ஆசிரியர் என் நண்பர் முருகு. சுப்பிரமணியம், ஒரு நாள் தன் இதழிலிருந்து இரண்டு பக்கங்களையும் அவற்றையொட்டி அவருக்கு எழுதப்பட்ட சில கடிதங்களையும் எனக்கு அனுப்பி வைத்தார். இவற்றின் அடிப்படையில் என்னைக் கதை எழுதச் சொல்லிவிட்டு, தன் இதழில் 'ஆடும் மாடும்' என்ற தலைப்பில் நான் தொடர்கதை எழுதுவேன் என்று விளம்பரமும் செய்து விட்டார்.