book

ஜூதான் எச்சில்

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வெ. கோவிந்தசாமி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123422831
Add to Cart

 குரூரங்கள், ஒடுக்குமுறை, அளவிறந்த ஓரவஞ்சனை, தாளவியலா அவமானங்கள் முதலிய ஈனக் கூறுகளால் நிரம்பிவழியும் ஒரு சமூகச் சூழலுக்கு நடுவே ஜீவ மரணப் போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கும் தலித்களின் வாழ்க்கைப் பரிமாணத்தைச் சித்தரிப்பதே இந்நூல்.
திருமண வைபவங்களின்போது ஊன், உணவு, வெஞ்சனங்களைத் திருமண கோஷ்டியினர் கபளீகரம் செய்துகொண்டிருக்க சுஹ்ரா சாதி மக்களோ கூடைகள் சகிதம் வெளியே காத்துக்கிடப்பார்கள்.
வைபவம் முடிந்தவுடன் எச்சில் இலைகள் அவர்களது கூடைகளை அடைத்து நிரப்பும்.
பின்பு, அந்தக் கூடைகள் எல்லாம் உவகைக் குமிழியிட அவரவர் உறைவிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படும்.
எச்சில் இலைகளில் தொத்திக்கொண்டிருக்கும் மிச்சசொச்சங்களே அவர்களின் அன்றைய 'ஃபுல் மீல்ஸ்'.
பூரி, இனிப்பு, காய்கறிகளின் மீதமிச்சங்களேகூட அவர்களுக்கு அளப்பரிய களிப்பை ஏற்படுத்திவிடும் என்றால் பாருங்கள்.
இலையில் பருக்கைக்கூட விட்டுவைக்காமல் வழித்தெடுத்தவர்களை 'பெருந்தீனி' என்று விகடம் பண்ணுவார்கள். சில நேரங்களில் சபிக்கவும் செய்வார்கள்.
வாழ்க்கையில் ஒருமுறைக்கூட 'விருந்து' சாப்பிட்டிராத ஜீவராசிகள் இவர்கள்!
அதனால்தானோ என்னவோ எச்சில் உணவுகூட இவர்களுக்குப் பெரும் பூரிப்பையும் ஆத்ம திருப்தியையும் ஏற்படுத்திற்று; அவற்றை ரசித்து ருசித்துப் புசித்தார்கள்.